உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடிப்பெருக்கு: மக்கள் புனித நீராடி வழிபாடு

ஆடிப்பெருக்கு: மக்கள் புனித நீராடி வழிபாடு

ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.ஆடிப் பெருக்கு தினத்தில் செய்யக்கூடிய எந்தவொரு நல்ல செயலுக்கும் புண்ணியம் பெருகும். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். மக்கள், குறிப்பாக புது மணத்தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் படையலிட்டு, காவிரி அன்னையை பெண்கள் வழிப்பட்டனர். புதிய மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். இது போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரைகளில் மக்கள் பூஜை செய்தனர். தம்பதிகள் மஞ்சள் கயிறு , புது தாலி மாற்றி கொண்டனர். அரிசி, பழம், பால் என படையலிட்டு பூஜை நடத்தினர்.

நாமக்கல்:

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், ஆடிப்பெருக்கு விழாவை, ஏராளமான மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டத்தில், காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் கருகமணி வைத்து, கன்னிமார் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாலை, ஆற்றில் நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி:

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள், படையலிட்டுசிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதமாக போற்றப்படுகிறது. ஆடி மாதம் அன்று பெண்கள் நதிக்கரையில் அம்மனுக்கு படையிட்டு வணங்குகின்றனர்.காவிரியில் நடப்பதைப்போலவே நெல்லையிலும் தீராநதி தாமிரபரணிக்கரையில் ஆடிப்பெருக்கு நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமிகோயில் படித்துறையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்களுக்கு தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகளுக்கு மகசூல் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஆடிப்பெருக்கு அன்று வழிபடுகிறார்கள். பல வகையான பொருட்களை வைத்தும் படைத்தனர். பெண்கள் தாலிச்சரடை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் இந்த வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pmsamy
ஆக 04, 2025 07:32

ஆடிப்பெருக்கு தினத்தில் தற்கால மக்கள் வீட்டில் நடனம் ஆடிய படி வீட்டை பெருக்கினார்கள்


M S RAGHUNATHAN
ஆக 03, 2025 16:43

பகுத்தறிவு பகலவன்கள் சத்தத்தை கேட்க முடியவில்லை. அவர்கள் மனைவிமார்கள் கழுத்தில் புது தாலி சரடு கட்டிக்கொண்டு இருப்பார்கள்.


T.Senthilsigamani
ஆக 03, 2025 12:48

செல்வமும் வளமும் பெருகி பெருகட்டும்


அப்பாவி
ஆக 03, 2025 11:05

புனித நீர் ஆடுறேன்னுட்டு அழுக்கு வேட்டி, புடவை யெல்லாம் நீர் நிலையில் உட்டுட்டு வந்துருவாங்க.


Jack
ஆக 03, 2025 13:55

சமூக சேவை செய்யலாமே ..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 03, 2025 14:13

எரியுது