பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நெய்
சென்னை:திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலந்திருந்ததாக தகவல் வெளியானது.இந்த நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்த நிறுவனம், பழனி முருகன் கோவிலுக்கும் சப்ளை செய்வதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது முற்றிலும் பொய்யான செய்தி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்ட அறிவிப்பில், 'பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்தில் பெறப்படுவதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.