உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்த தாய்: பெண் குழந்தை பரிதாப பலி

ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்த தாய்: பெண் குழந்தை பரிதாப பலி

வேலூர்: வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தையுடன், தாய் ஐந்தாவது முõடியில் இருந்து குதித்தார். இதில், பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. வேலூர் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த விவசாயி தனவேல். இவரின் மனைவி ராஜலட்சுமி,20. இவருக்கு, கடந்த ஜூலை 25ம் தேதி, சோளிங்கர் அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில், ஐந்தாவது தளத்தில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. உடன் ராஜலட்சுமி இருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் ராஜலட்சுமி, திடீரென ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்தார். இதில், நான்காவது தளத்தில் ராஜலட்சுமி விழுந்தார். குழந்தை தரையில் விழுந்து, உடல் சிதறி பரிதாபமாக இறந்தது. ராஜலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மருத்துவமனையில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. வேலூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை