உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லோருக்கும் துணையாயிருப்பது வானிலை ஆய்வு மையம்

எல்லோருக்கும் துணையாயிருப்பது வானிலை ஆய்வு மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, : ''நிலத்தை உழும் விவசாயிகள் முதல் எல்லைகளில் போராடும் வீரர்கள்வரை அனைவரது வாழ்க்கையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.தலைநகர் புதுடில்லியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற துணை ஜனாதிபதியும் ராஜ்யபா தலைவருமான ஜக்தீப் தன்கர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் 'மவுசம்' என்ற மொபைல் செயலியை துவங்கி வைத்தார்.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:

முந்தைய காலத்தில் விஞ்ஞான முன்னேற்றம் இல்லாததால் வானிலை ஆய்வு மையம் வழங்கிய முன்னறிவிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ஒவ்வொரு வினாடிக்கும் துல்லியமான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.வானிலை முன்னறிவிப்புகளை தாண்டி தேசிய நலன்களை பாதுகாக்கும் மற்றும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக இந்திய வானிலை ஆய்வு மையம் உருவெடுத்துஉள்ளது.விவசாயம் முதல் சுகாதாரம் விமானம் முதல் எரிசக்தி நிலத்தை உழும் விவசாயி முதல் நாட்டின் எல்லையில் போராடும் ராணுவ வீரர் வரை அனைவரது வாழ்க்கையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கி வரும் துல்லியமான தகவல்களால் ஆழ்கடலில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. மேலும் எந்த கப்பல்களும் சேதமடையவில்லை. நம் விஞ்ஞானிகளின் திறமைகளை பார்த்து நாடே பெருமைப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில் பா.ஜ.வைச் சேர்ந்த மத்தியபுவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

g.s,rajan
ஜன 16, 2024 09:06

குறிப்பாக வானிலை உட்பட ,மத்திய ,மாநில அரசுகளும் தமிழக மக்களுக்கு நிச்சயம் சாதகமாக இல்லை,கடும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் பல மாதங்களாகத் தவியாகத் தவிக்கின்றனர்,இந்த மழைவெள்ள பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ,பலர் வீடு ,வாகனங்கள் ,தொழில் ,மற்றும் வருமானத்தை இழந்து வாடுகின்றனர் ,கொரோனா தாக்குதலுக்குப் பிறகு பலர் அந்த பாதிப்பில் இருந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து தலை தூக்கவே முடியவில்லை .தொலைக்காட்சித் தொடரில் வேனும் நீயா நானா போல் விவாதம் ,வாக்குவாதம் தான் நடந்து கொண்டே இருக்கிறது . முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது மிகவும் வேதனை ....


g.s,rajan
ஜன 16, 2024 08:48

இந்தியாவில் இயற்கையின் சீற்றங்களுக்கு இனி இறைவன்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும், மத்திய, மாநில அரசாங்கங்கள் கட்டாயம் கையைக் கழுவி விடும், நிச்சயம் அரசாங்கங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாது, பொது மக்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் சொற்ப நிவாரணம்தான் அளிக்கும் அல்லது சல்லிக்காசு கூடக் கிடைக்காது .மொத்தத்தில் எல்லாம் மக்கள் தலையில்தான் விடியும் ....


spr
ஜன 16, 2024 06:59

ஒரு தனி மனிதர் எந்தவிதமான மின்சாதனமும் இன்றி ஏறக்குறைய நம்பகமான வானிலைத் தகவல்களைக் கூறி வரும் வகையில், கோடிக்கணக்கில் செலவு செய்து லட்சக்கணக்கில் ஊதியம் கொடுத்து அதிகாரிகளை பனி செய்ய, அனைத்துவிதமான விண்வெளிக் காலங்களும் உதவும் வானிலை ஆய்வு மய்யம் இன்னும் சிறப்பான தகவல்களை கூற வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு இல்லை


அப்புசாமி
ஜன 16, 2024 06:40

150 வருஷமாவே மழை மிக லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். பெய்யாமல் போகக்கூடும் மேக மூட்டம் காணப்படும்ங்கற ரேஞ்சில் தான் அறிக்கை வருது. இப்போ டாப்ளர் உதவியுடன் வளிமண்டல் கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சி சேத்து சொல்றாங்க.


Ramesh Sargam
ஜன 16, 2024 06:26

ஆனால் தமிழக முதலவர் மட்டும் சென்னை வானிலை மையத்தை குறைகூறுகிறார். கடந்த மாதம் ஏட்பட்ட புயல் மற்றும் மழையை சென்னை வானிலை மையம் சரியாக கூறி தமிழக அரசை எச்சரிக்காததால்தான் அவர் மக்களை மழை பாதிப்பிலிருந்து காப்பாற்றமுடியாமல் போய்விட்டதாம்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ