உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பணம் கேட்டு மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு புகாரின் கீழ் வாராகி என்ற யுடியூபரை போலீசார் கைது செய்தனர்.பிறகு அவர், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் தனபால் அமர்வு, குண்டர் சட்டத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது. உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியதுடன் வாராகிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கியதுடன், அவரது மனைவி தொடர்ந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
டிச 30, 2025 21:54

குண்டர் சட்டம் என்ற பெயரை மாற்றிவிட்டு அரசின் குண்டர்களால் அவர்களை காப்பாற்றும் சட்டம் என்றே பெயரிடமே சாதாரண குடிமக்கள் அரசைப்பற்றியோ அல்லது அரசை ஆளும் குண்டர்களைப்பற்றியோ ஏதாவது பேசினால் உடனே அவனுக்கு ஜெயில் இதென்ன குண்டர்கள் ஆட்சியா என்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 30, 2025 20:48

பெரிய சார் சொன்னாருன்னு செஞ்சுட்டோமுங்க ....


Balaa
டிச 30, 2025 18:22

Perverted sadistic attitude


Raja
டிச 30, 2025 16:48

இந்த போலீசாரை ஒரு ஆறு மாதம் சிறையில் வைக்க வேண்டும்.


G Mahalingam
டிச 30, 2025 16:47

தமிழக போலீசார் திமுக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இப்போது இருப்பது திமுக போலீசார் தான். குண்டர் சட்டம் போட சொன்னதே சூப்பர் முதலமைச்சர் தான்.


V Venkatachalam, Chennai-87
டிச 30, 2025 16:43

யூ டியூபர் அதுவும் முகஸ் கவர்மெண்டை விமர்சனம் செய்தால் அவனை நைய புடைத்து நார் நாராக்கி விடுவார்கள். அவன் இந்த ஜென்மத்தில் இந்த அரசை விமர்சனம் செய்ய துணியாத அளவுக்கு அவனை கவனித்து விடுவார்கள். இப்பவே எலக்ஷன் வந்து இந்த அரசை நாலு மொத்து மொத்தி விரட்டி விட்டால் தேவலாம் போல இருக்கு.


அருண் பிரகாஷ் மதுரை
டிச 30, 2025 16:39

மிகவும் தவறான முன்னுதாரணம்..10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இதுபோல கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது உண்டா..உண்மை விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது..


duruvasar
டிச 30, 2025 16:09

ஐயா எங்களுக்கு குருணை காட்டுங்கள். நீதி மன்றங்களில் வழக்குகள் நிலுவையிலிருபதுபோல் டெல்லியில எங்கள் ஆஸ்தான வழக்கறிஞர்கள் கைலியில் நிறைய வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். .ஆகவே.......


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 30, 2025 16:04

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்தும்படி போலீசாருக்கு ஆணையிட்ட போலீஸ் துறை அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை ஐகோர்ட் உத்தரவிடவில்லையே


V Venkatachalam, Chennai-87
டிச 30, 2025 20:41

அம்பு தான் கண்ணுக்கு தெரியும். எது தெரியுதோ அதைதான் பிடிச்சுக்குவோம். இந்த பார்மூலாவை முழுசுமா கருணாநிதி உபயோகப் படுத்தி தன்னை எதிர்ப்பவனை வெளுக்குறதுக்கும் அல்லது தீர்த்து கட்டுவதற்கும் ஆயுதமா வச்சிகிட்டு மிரட்டிக்கிட்டு இருந்தார். இப்போ சொல்லுங்க அம்புக்கு தண்டனையா? அம்பு வுட்டவனுக்கு தண்டனையா?


சமீபத்திய செய்தி