உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத பின்னணியில் இருப்போர்மீது நடவடிக்கை தேவை; போர் தேவையில்லை: திருமாவளவன் யோசனை

பயங்கரவாத பின்னணியில் இருப்போர்மீது நடவடிக்கை தேவை; போர் தேவையில்லை: திருமாவளவன் யோசனை

அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை. அடுத்த கணக்கெடுப்பு 2031ல் வரும் என தெரிகிறது.அப்போது பா.ஜ., ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது இந்த அறிவிப்பை செய்திருப்பது கண்துடைப்புதான். இந்தியா கூட்டணியிலுள்ள எதிர்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை பா.ஜ., அறிவித்து இருக்கிறது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்பினார். டில்லியில் அமைச்சரோடு ஆலோசித்தவர், பீஹாருக்கு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்பதுபோல பா.ஜ., அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக சொல்கின்றனர். பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாமீது போர் தொடுப்போம் என்கிறார். பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை ஊடகங்கள் பணம் செலுத்தி ஒளிபரப்பு பெற வேண்டும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் தலையிட்டு ஊடகங்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல் அனுமதிக்க வேண்டும். கலெக்டர் ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையில் நடத்தக் கூடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

Ramalingam Shanmugam
மே 30, 2025 13:27

குருமா பக்கிஸ்தான் போய் சொல்லிட்டு வாயேன்


veeramani
மே 30, 2025 09:52

திருமாவளவன் போன்ற அறிவிலிகள் கருத்தை தினமலர் பிரசுரிப்பது தென் பாண்டி நாட்டு மக்களுக்கு வருத்தம் அளிக்கிறது


Siva Kumar
மே 29, 2025 14:49

இது ஒண்ணுத்துக்கும் உதவாத குப்பை. எப்போ பாத்தாலும் சாதி மதம் பத்திதான் பேசுவான் இந்த உதவாக்கரை. தேச பக்தியோ தேச ஒற்றுமை பத்தியோ பேச தெரியாத... இது தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே தேவையில்லாத குப்பை.


Muthamil
மே 09, 2025 21:43

இவரை என்ன பண்றதுனே தெரியலையே...


Arinyar Annamalai
மே 09, 2025 19:27

இந்த சில்லுண்டியெல்லாம் ஒரு தலைவர், கருமம் கருமம்


sundarsvpr
மே 09, 2025 16:10

நமக்கு போர் தேவை திருமாவளவன் போன்றோர் மீது. நிச்சியம் தமிழக மக்கள் தொடுப்பார்கள்.


Sathyan
மே 09, 2025 09:25

முதலமைச்சர் ஜெயலலிதா வாழும் காலங்களில் இந்த குருமா பட்டியெல்லாம் அட்ரெஸ்ஸே இல்லாம இருந்தார், இப்போ இதெல்லாம் பேசுது, இவர் வாலை ஓட்ட அறுக்க வேண்டும்.


Natarajan Ramanathan
மே 08, 2025 20:43

அப்படியென்றால் முதலில் உன்மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...


SRITHAR MADHAVAN
மே 07, 2025 17:10

அவர் அரசியல்வாதி என்பதால், அவர் என்ன நினைத்தாலும் வாந்தி எடுக்கிறார். அவரை பயங்கரவாதியாக சிறையில் அடைக்கவும். அப்போது அவருக்கு நம் பாரதத் தாய் மீது பாசம் இருக்கும்.


Balamurugan
மே 07, 2025 13:51

குருமா சொல்வது சரி தான். நடவடிக்கையை முதலில் இவர் மீது தான் எடுக்க வேண்டும். இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ