உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீகூர் யானை வழித்தடத்தில் விடுதிகளை இடிக்க நடவடிக்கை

சீகூர் யானை வழித்தடத்தில் விடுதிகளை இடிக்க நடவடிக்கை

ஊட்டி: மசினகுடி, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள, 39 விடுதி கட்டடங்களை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. இப்பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட, சுற்றுலா விடுதிகள் உட்பட பிற கட்டடங்களை அகற்ற, 2008ல் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் கீழ், சீகூர் பள்ளத்தாக்கில், யானைகள் வழித்தடம் தொடர்பாக, 2010ல் வரைப்படத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது. அப்பகுதி காட்டேஜ் உரிமையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். 2018 ஆக., சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, 39 கட்டடங்கள்; 309 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது. அதன்பின், உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, 2020 அக்., 14ல் வழங்கப்பட்ட கோர்ட் உத்தரவில், 'யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்னைகளை ஆராய, சென்னை ஐகோர்ட் ஓய்வு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்க படும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 07:52

இடித்தால் மட்டும் போதாது, அந்த கட்டிட கழிவுகளை அப்படியே விட்டுவிடாமல், அல்லது அங்கு ஏதாவது பள்ளத்தாக்கில் கொட்டிவிடாமல் மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, சுத்தம் செய்தபின் அங்கு மீண்டும் மரக்கன்றுகளை ஊன்றி, வளர்த்து, வனப்பகுதியாக்க வேண்டும். அதற்கான செலவை அந்த விடுதி உரிமையாளர்கள் மற்றும் அந்த விடுதிகளை கட்ட அனுமதி கொடுத்த அரசு ஊழியர்களிடம் வசூலிக்க வேண்டும். இதுதான் சரியான நடை முறை.


Balaa
செப் 16, 2025 07:14

இடிப்பது சரி. முறைகேடாக அனுமதி தந்த அதிகாரிகள், ஆய்வு செய்யாமல் இருந்த அதிகாரிகள் மற்றும் இதனால் பலனடைந்த அரசியல்வாதிகள் இவர்கள் மீது என்ன நடவடிக்கை.


PR Makudeswaran
செப் 16, 2025 13:13

எல்லோரையும் மரணம் வரை தூக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை