உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்.ஐ.ஆர்., கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி

எப்.ஐ.ஆர்., கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) வெளியில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், '' என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சம்பவம் நடந்த பிறகு, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பதிவு செய்வது தான் எப்.ஐ.ஆர்., சந்தேகப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தோம். அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பிறகு 25ம் தேதி காலை குற்றவாளியை கைது செய்தோம். அவன் தான் குற்றத்தை செய்தான் என்பதை உறுதி செய்து, சிறையில் அடைத்தோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h9c9e78k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர்., இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது அது தானாக 'பிளாக்' ஆகிவிடும். ஐ.பி.சி.,க்கு பதில் பி.என்.எஸ்., சட்டத்தில் வழக்குப்பதிவு செய்கிறோம். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பிளாக் ஆவது தாமதமானது. அந்தநேரத்தில் ஒரு சிலர் அதனை பார்த்து தரவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் எப்.ஐ.ஆர்., கசிந்து இருக்கலாம். புகார் அளித்தவருக்கு எப்.ஐ.ஆர்., அளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு அளித்தோம்.பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியில் சொன்னாலும் நடவடிக்கை எடுப்போம்.பாலியல் வழக்கில், எப்.ஐ.ஆர்., கசிவு செய்வது குற்றம். எதை எடுத்து விவாதம் செய்வது பெரிய குற்றம். பாதிக்கப்பட்டவர்களின் விவரம் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. எப்.ஐ.ஆர்.,ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வேறு புகார் வரவில்லை

இதுவரை நடந்த புலன் விசாரணையில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி.2013ல் இருந்து அவன் மீது சென்னையில் 20 வழக்குகள் உள்ளன. அனைத்தும் திருட்டு, கள்ளக்களவு வழக்குகள் மட்டுமே. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக எந்த வழக்கும் இல்லை. ஆறு வழக்குகளில் தண்டனை கிடைத்து உள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை நடக்கிறது. ஞானசேகரனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டனர் என இதுவரை போலீசில் எந்த புகாரும் வரவில்லை. அவனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது தெரியவந்தால், பாதிக்கப்பட்டவர்களிடம் வழக்குப் பெற்று நடவடிக்கை எடுப்போம். 2019க்கு பிறகு அவன் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இல்லை.

பாகுபாடு கிடையாது

அண்ணா பல்கலையில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.56 வேலை செய்கிறது. அங்கு 140 பேர் பாதுகாவர்களாக பணிபுரிகின்றனர். முதல் இரண்டு ஷி்படில் தலா 49 பேரும், 3வது ஷிப்டில் 42 பேரும் பணிபுரிகின்றனர். பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்குள் காலையும், மாலையும் பொது மக்கள் சென்று வர அனுமதி வழங்குகிறார்கள். சந்தேகம் இருந்தால் மட்டுமே தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். கட்சி பாகுபாடு எங்களுக்கு கிடையாது. குற்றவாளி எந்த கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் மீது நம்பிக்கை வைத்து புகார் அளித்தார். அவர்கள் நம்பிக்கை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக இருக்கிறார். எந்த குற்றம் நடந்தாலும், யோசிக்காமல் போலீசாரை அணுகி புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Bharathi
டிச 27, 2024 15:42

இந்த ஆளு IASஆ இல்ல இருநூறு ரூவா உப்பியா?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 27, 2024 12:42

கட்சி என்பது இவருக்கு முக்கியமில்லையாம். என்ன கேனத்தனமான ஸ்டேட்மென்ட். காவல்துறை திமுகாவின் ஏவல் துறை என்பது பைத்தியக்காரன் உனக்கு கூட தெரியும். கோபாலபுரத்திலிருந்து என்ன கட்டளை வருகிறதோ அதை நிறைவேற்றுவது தான் இவரின் வேலை. அண்ணாமலை கூறியதுபோல் நான் இன்று காவல் அதிகாரியாக இருந்திருந்தால் அவனை சுட்டு கொன்றிருப்பேன் என்றார்....இந்த கமிஷ்னர் அவனை கொல்ல வேண்டாம் அப்படி சொல்ல தில் இருக்கா ??? கோபாலபுரம் தான் சொல்ல விட்றுமா....!!!


Kanns
டிச 27, 2024 12:11

Sack& Punish All these AntiPeople & PowerMisusing RulingPartyGoondas Supporting Superiors of Officials esp Police/Judges, Bureaucrats


Rajasekar Jayaraman
டிச 27, 2024 11:44

சஸ்பென்ட் இல்லை டிஸ்மிஸ் செய்யவேண்டும் ஒரு குடும்பத்தையே நாசமாக்கிவிட்ட பொறம்போக்கை டிஸ்மிஸ் செய்து ஆயுள் தன்டனை தரவேண்டும்.


அப்பாவி
டிச 27, 2024 10:45

சொல்லி எவ்ளோ நாழியாச்சு. இன்னும் கசிய உட்டவன் யாருன்னு சொல்லலியே. ஏசாம அரவிய உதறிட்டு தி.மு.க விலை, பா.ஜ விலை சேந்துரலாம்.


பாரதி
டிச 27, 2024 10:43

கூட்டுத் திருடர்களின் போலி கண்ணீர் நெருப்பை வளர்க்கும்


Shekar
டிச 27, 2024 10:23

வேறு பெண்கள் பாதிக்கப்பட்டனர் என இதுவரை போலீசில் எந்த புகாரும் வரவில்லை.. புகார் கொடுக்க வந்தா FIR ன்னு அவங்க ஊர் பேர் அங்க அடையாளம் எல்லாம் ஆன்லைன்ல போட்டுட்டு, டெக்னீகல் பால்ட் அப்படின்னு தண்டரோ போட்டதுக்கு நொண்டிச்சாக்கு சொல்லுவீங்கன்னு நினைச்சி, யாரும் புகார் கொடுக்காம இருந்திருக்கலாம்


Kasimani Baskaran
டிச 27, 2024 10:11

இரண்டு ஆண்டுகள் முடிந்தும் வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை - ஆனால் இந்தப்பிரச்சினையில் ஓரிரு நாளில் கையை அடித்து உடைத்து அது மின்னல் வேகத்தில் சரியானபின்னர் காலில் பிளாஸ்டர். ஏரோ பிளேன் மோடு கூட தள்ளுவண்டி பிரியாணிக்கடைக்காரனுக்கு தெரிந்திருக்கிறது என்பது தமிழகம் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கிறது என்பதை காட்டுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் குற்றவாளிக்கு காவல்துறையே மிகுந்த பயபக்தி காட்டி முட்டுக்கொடுத்து இருக்கிறது. ஒரு வேலை இந்த முறையும் இதய அடைப்பு என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் பிளாஸ்டர் வைத்து போட்டோ ஷூட் நடத்தியிருக்க அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது.


p karuppaiah
டிச 27, 2024 09:40

இந்தியாவின் சட்ட திட்டங்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன் மற்றும் வெட்கப்படுகிறேன், 20 முறை வழக்கு பதிவு செய்தவன் என்று கூறுவதற்கு நாம் வெட்கி தலை குனியவேண்டும், இரண்டாவது முறை குற்றம் பதிவு செய்தவுடன் அவனுக்கு குறைந்த பட்சம் ஒரு விரலையாவது வெட்டி இருக்க வேண்டும், 20 முறை குற்றம் செய்தேன் என்றால் இதை விட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது, இப்பவாவது சட்டத்தை நிறுத்துங்க ப்ளீஸ், பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அதுக்கு கீழ் உள்ளவர்களே, இது ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது வசதி படைத்தவருக்கோ நடந்தால் அப்போ தெரியம். நாம் அனைவரும் வெட்கி தலைகுனிவோம் .


மணியன்
டிச 27, 2024 09:12

உலகப்புகழ் பெற்ற சென்னை மாநகரத்துக்கு இப்படி ஒரு களையற்ற காவல் ஆணையர்.


முக்கிய வீடியோ