உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாமின் கேட்டு நடிகர் மனு

ஜாமின் கேட்டு நடிகர் மனு

போதைப்பொருள் வழக்கில் ஜாமின் கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும், வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை தவறாக போலீசார் கைது செய்துள்ளனர். நான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கிற்கு தொடர்புடைய எந்த போதைப்பொருளையும் என்னிடம் இருந்து போலீசார் கைப்பற்றவில்லை.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாத் உள்ளிட்ட யாருடனும் தொடர்பு இல்லை. அதேபோல், நடிகர் ஸ்ரீகாந்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்த வழக்கு, உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளேன். கெவின் என்பவருக்கும், எனக்கும் அண்மை காலங்களில் எந்த தொடர்பும் இல்லை. கடந்த, 2020ம் ஆண்டுகளுக்கு பின், அவருடன் எந்த நட்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், அவரின், 'வாட்ஸாப்' குழுவில் இருந்து, நான் வெளியேறி விட்டேன்.அதன்பின், எனக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ