உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; நடிகரும், பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eb7v5xf8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஷிஹான் ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Balu1968
மார் 26, 2025 05:00

அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கராத்தே வகுப்பு பயிற்றுவிக்கும் காலங்களில் அவருடைய மாணாக்கர்களின் நானும் ஒருவன். சில தனிப்பட்ட காரணங்களுக்காக பயிற்சியை நீண்ட காலம் என்னால் தொடர இயலவில்லை. நான் கண்டு மலைத்த மனிதர்களில் இவரும் ஒருவர் பாலு-மதுரை- ரேஸ் கோர்ஸ் காலனி ஆஸ்திரேலியா தற்சமயம்


Kayd
மார் 25, 2025 16:00

மதுரை SS காலனி ஆள். நான் சிறுவனாக இருந்த போது ஆ என்று பார்த்த ஒரு கராத்தே மாஸ்டர். தினமும் எங்கள் வீடு வழியா நடந்து போவார்.. ஜப்பான் ல பல மெடல் பெற்றவர். Healthy person குடி மற்றும் சிகரெட் பழக்கம் இல்லை.. எப்படி vinodha cancer வந்துச்சு.. May God him eternal rest and peace


சிவம்
மார் 25, 2025 15:20

சில நாட்களில் தனக்கு இறப்பு வரப்போகிறது என்று தெரிந்து யூ டியூபில் பேட்டி கூட கொடுத்திருக்கிறார். இதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும். ஹுசைனி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருளட்டும்.


S.V.Srinivasan
மார் 25, 2025 14:30

MAY HIS SOUL REST IN PEACE. OM SHANTHI.


Padmasridharan
மார் 25, 2025 11:28

பெசன்ட் நகரில் இவருடைய இல்லம் விற்பனைக்கு வந்துள்ளது. சிற்பங்கள் செய்பவர். Mgr_Janaki கல்லூரியில் ஆசிரியர். பவன் கல்யாணுக்கு கராத்தே கலையை கற்றுக்கொடுத்தவர். நடிகர் விக்ரமனின் நண்பர். RIP


Raj
மார் 25, 2025 10:47

நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.


KRISHNA
மார் 25, 2025 10:32

கராத்தே குரு திரு. ஷிஹான் ஹுசைனி, வாழும் போது வீரனாக வாழ்ந்தார். தனக்கு ரத்த புற்றுநோய் என்று தெரிந்தும் தைரியத்துடன் இருந்தார். ஹுசைனி சார் முக்தியடைய சிவபெருமான் அருள் புரிய வேண்டும். ஜெய் ஹிந்த்.


KRISHNAN R
மார் 25, 2025 09:57

கிரேட் மேன் .


Seekayyes
மார் 25, 2025 08:36

ஆழ்ந்த இரங்கல்கள்.


RK
மார் 25, 2025 08:27

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை