உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் மீண்டும் கைது

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் மீண்டும் கைது

சென்னை:டில்லி தொழில் அதிபருக்கு, 1,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக, முன் பணமாக, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 63. இவர், லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா உலகில் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்படுகிறார். இவர், டில்லியை சேர்ந்த தொழில் அதிபர் திலீப்குமார் என்பவருக்கு, வங்கியில், 1,000 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு முன் பணமாக, 10 கோடி ரூபாய் கேட்டு, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து, திலீப்குமார் டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, கடந்த, 2013ல், சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்தவர், 2018ல் இருந்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால், நீதிமன்ற உத் தரவின்படி, டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் தங்கி இருந்த சீனிவாசனை, நேற்று கைது செய்து, அழைத்து சென் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி