உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்ப் சட்டம் வழக்கு போட்ட நடிகர் விஜய்

வக்ப் சட்டம் வழக்கு போட்ட நடிகர் விஜய்

சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க., தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஓவைசி கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து, தி.மு.க., சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலர் ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க., தலைவர் விஜயும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.இந்த மனுவும், நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V.Mohan
ஏப் 16, 2025 15:37

நானும் கட்சி நடத்துரேன்னு காமிக்கிற மாதிரி சின்னப்புள்ளத்தனமாக இல்ல இருக்கு??


V.Mohan
ஏப் 16, 2025 15:34

கிராமங்களில் எளிய மக்கள் நகைச்சுவையாக சொல்வது, "" எம் புருஷனும் கோர்ட்டில் வேலை செய்பவரும், வக்கீல் குமாஸ்தாக்களும்,மற்றும் கேசு கொடுத்தவரும் ""கச்சேரிக்கு"" கோர்ட்/ நீதிமன்றத்திற்கு போறாரு. என்பது- இந்த ஜோசப் விஜய் கட்சிக்கு பொருந்தும். சினிமாவில் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் பாணியை பின்பற்றி மக்கள் விரும்பும் அவர்களது சிறப்பான நடிப்பை பின்பற்றினால் கூட்டம் வரும், பாப்புலாரிட்டி வரும்.ஓகே. அரசியலில் எல்லா கட்சிகளிலும் உள்ள சிறப்பு தலைவர் பெயர்களை லிஸ்ட் எடுத்து அவர்களது கொள்கையை பின்பற்றுவோம் என சொல்வது, ஆனாலும் ரொம்ப...ப """சின்னப் புள்ளத்தனமாவுல்ல இருக்குது"""


Prasanna Krishnan R
ஏப் 14, 2025 15:03

Waste fellow


கண்ணன்
ஏப் 14, 2025 12:05

இவர்கள் கட்சியில் எவருக்கும் படிப்பறிவில்லை எல்லோரும் விசிலடித்தான் குஞ்சுகள்தாம்! இதில் வழக்கா! நல்ல நகைச்சுவை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை