உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்தார் நோன்பு திறந்தார் விஜய்; முண்டியடித்துக் கொண்டு திரண்ட ரசிகர்கள்

இப்தார் நோன்பு திறந்தார் விஜய்; முண்டியடித்துக் கொண்டு திரண்ட ரசிகர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், இன்று (மார்ச் 7ம் தேதி) இப்தார் நோன்பு திறந்தார்.ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு த.வெ.க., சார்பில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் பங்கேற்க கட்சியின் சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது.அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறப்பதற்காக நடிகர் விஜய் இன்று (மார்ச் 7) மாலை 5.20 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ., அரங்கம் வந்தார். காரில் இருந்து இறங்கும் போது, இஸ்லாமியர்கள் போன்று, கைலி, சட்டை மற்றும் குல்லா அணிந்து காட்சி அளித்தார். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்த படியே அவர் அரங்கின் உள்ளே சென்றார். பின்னர், அரங்கினுள் சென்ற அவர், நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் இஸ்லாமியர்களுடன் வரிசையில் அமர்ந்தார். தொழுகை செய்துவிட்டு நோன்பு கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு இப்தார் நோன்பு திறந்தார். நோன்பு திறந்த பின்னர், த.வெ.க., சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக, நோன்பு நிகழ்வில் கலந்து கொள்ள கட்சியின் சார்பில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்கள் விஜயை பார்க்க ஆர்வத்துடன் அரங்கினுள் முண்டியடித்துச்சென்றனர். இதனால் அரங்கின் நுழைவு வாயிலில் இருந்த பெரிய கண்ணாடி உடைந்து சிதறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Training Coordinator
மார் 10, 2025 15:29

இந்த வேசம் கட்டும் வேலையை எந்த முஸ்லீமும் நம்ப மாட்டார்கள். எல்லா அரசியல்வாதிகளும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது வேடிக்கை / வேதனை


Appa V
மார் 09, 2025 00:03

வெள்ளரிக்கா மாதிரி சலாட் பண்ண வேண்டாமா


Ponnayeerachami Ponnayiram
மார் 08, 2025 15:36

உங்களை மாதிரி வேஷம் போடலை. எங்க மத அடையாளைத்தோட தானே வந்தோமே. அது தான் உண்மையான மத சார்பின்மை. நீங்க நீங்களா இருங்க, நாங்க நாங்களா இருக்கோம். ஆனா ஒண்ணா இருப்போம்.


vijai hindu
மார் 08, 2025 11:26

முஸ்லிம்கள் ஓட்டு வேணும்னா கஞ்சி குடி பிரியாணி சாப்பிடு எதுக்கு இந்த வேஷம் குல்லா வேஷம் ஜோசப்


Haja Kuthubdeen
மார் 08, 2025 10:33

அனைத்து சங்கிகளும் ஒன்று கூடி விஜய் இப்தார் நிகழ்வை கிண்டலும் கேலியும் செய்வது புரிந்து கொள்ள முடியுது...தமிழக பிஜெபி சார்பாகவும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வரவழைத்து இப்தார் நிகழ்வு நடந்ததே..


Madras Madra
மார் 08, 2025 15:37

இஃப்தார் நிகழ்வு கேலி பொருள் அல்ல அண்ணாமலை அண்ணாமலையாக வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டார் ஜோசப் விஜய் ஏன் குல்லா போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்ற வேண்டும்


B MAADHAVAN
மார் 08, 2025 08:51

அடுத்த ராவுல்... நம்ப ஜோசப் விஜய் ராவுத்தர் தான்.


பேசும் தமிழன்
மார் 08, 2025 08:34

கஞ்சி மற்றும் பிரியாணி வேண்டுமென்றால் போய் வாங்கி சாப்பிட்டு விட்டு வா.... ஆனால் எதற்க்காக குல்லா..... அவர்கள் யாராவது நம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களா.... அப்படியே வாழ்த்து தெரிவித்தாலும்.... வந்து காவி குல்லா / உடை போடுவார்களா ???..... பிறகு உங்களுக்கு மட்டும் எதற்கு இந்த வேண்டாத வேலை ??


c.k.sundar rao
மார் 08, 2025 08:25

Why blame the cine heroes for there rhetoric, people of the state are to be equally blamed for there obsesssion towards film heroes.


ramani
மார் 08, 2025 06:10

இந்த கூத்தாடி என்னா நடிப்பு நடிக்கிறான். சினிமாவில் தான் நடிக்கவில்லை. அரசியலில் மக்களை ஏமாற்ற செம் நடிப்பு


Iyer
மார் 08, 2025 06:10

வடக்கிந்தியாவில் சல்மான், SHARUKH போன்ற தேசவிரோதி நடிகர்களை மக்கள் பஹிஷ்காரம் செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டிலும் விஜய், கமல் போன்ற தேச மற்றும் ஹிந்து விரோதிகளை பஹிஷ்காரம் செய்யவேண்டும்


புதிய வீடியோ