உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தந்த சர்ப்ரைஸ்!

விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தந்த சர்ப்ரைஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் புதியதாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற வகைப்பாட்டில் தமிழக வெற்றிக்கழகம் பெயரும் இடம்பெற்றுள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரத்தில் அக்டோபர் 27ம் தேதி நடக்க உள்ளது. பிரமாண்டமான வகையில் நடத்த திட்டமிட்டு உள்ள இந்த மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளன. கட் அவுட்டுகள், மேடை அலங்காரம், வாகன நிறுத்தம், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் என மாநாட்டு பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wshw7u3k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாடு மகிழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் விழுப்புரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளது. அதாவது, லோக்சபா தேர்தலுக்கு பின்னர் புதியதாக பதிவு செய்யப்பட்டு கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியல் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று உள்ளது. பட்டியலில் மொத்தம் 39 கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 26வது பெயராக தமிழக வெற்றிக்கழகம் பெயரானது பிளாட் நம்பர் 275, சீஷோர் டவுன், 8வது அவின்யூ, பனையூர், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை 600119 என்ற முகவரியுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முகவரி, தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலக முகவரியாகும். த.வெ.க., தவிர தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தமிழகத்தில் இருந்து மேலும் 2 கட்சிகளும் புதியதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இடம்பிடித்து உள்ளன. நடிகர் விஜய் தமது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தருணத்தில், தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த பிப்ரவரி 2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க., உருவெடுத்ததை தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியல்களம் தயாராகிவிட்டதாக அவர்கள் உற்சாகம் அடைந்தனர். தற்போது கட்சியின் முதல் மாநாட்டில் பிசியாக இருக்கும் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் இரட்டிப்பு குஷியில் வலம் வர ஆரம்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
அக் 30, 2024 16:27

அதில் 26வது பெயராக தமிழக வெற்றிக்கழகம். எருமையிலும் எருமை இந்த நம்பர் - Numerology 1 "Numerologically, the number 26 is a very unlucky number. 26 comes to 8 2+6=8 which brings in destruction," Mumbai-based numerologist Sanjay Jhumani said. 2 The meaning of number 26 is wealth and prosperity. You will soon receive all the monetary rewards of your hard work. All the things that you have prayed so hard for will finally manifest in your லைப். இந்த ரெண்டையும் படிக்கின்றபோது ஒன்று புரிகின்றது 1தண்டமான வெட்டி கலக்கம் 2026ல் ஆட்சியில் பங்கேற்கும். 2 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு போலவே டாஸ்மாக்கினாட்டு மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இருக்காது. 3 ஆனால் அதில் உள்ள அரசியல் வியாதிகள் கொள்ளையோ கொள்ளை அடித்து ஊழல் செய்து நன்கு பணம் சேர்ப்பார்கள் 1000க்கணக்கான கோடியில் 4 கிறித்துவர்கள் நன்கு பயன் பெறுவார்கள்


venugopal s
அக் 26, 2024 07:31

மத்திய பாஜக அரசின் இந்த கவனிப்பு உபசரிப்பு எல்லாம் திமுக எதிர்ப்பு உள்ள வரை தான் என்பது ஞாபகம் இருக்கட்டும்!


தாமரை மலர்கிறது
அக் 26, 2024 01:18

ஜோசப் விஜய் நடிக்கும் தமிழக வெற்றி கழகம் திமுகவின் கிறித்துவ மைனாரிட்டி திராவிட ஓட்டுகளுக்கு ஆப்படிக்கும். விஜய் தூக்குவது ஈரோட்டு ராமசாமியின் படத்தை தான். இத்தனை நாள் ராமசாமி படத்தை காமித்து, திமுக பல்லாயிரம் கோடி சம்பாரித்துவிட்டது. நாமும் கொஞ்சம் ஆட்டைய போடலாமே என்று விஜய் நினைப்பதில் என்ன தவறு உள்ளது? எத்தனை நாளைக்கு தான் நடிக்க முடியும்? தனது ஓய்வுக்கு பின், குடும்பத்துக்கு ஒரு நிரந்தர வருமானம் வேண்டாமா? என்று விஜய் நினைப்பதில் அர்த்தம் உள்ளது. விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கும் வசூல் செய்து வயிறு வளர்க்க ஆசை.


Constitutional Goons
அக் 25, 2024 22:02

பாஜாவிற்கு காவடி தூக்கினால் அனைத்து மத்திய அமைப்புகளும் பணிவிடை செய்யும்


Jagannathan Narayanan
அக் 26, 2024 06:33

உங்க கருத்துக்கு என்ன பொருள்


Ramesh
அக் 26, 2024 08:19

புத்தி சாலி சமசீர் கல்வியில் தானே படிச்ச? அதான் மூளை மண்டைய பொளந்துக்கிட்டு வெளிய வழியுது


Narayanan Sa
அக் 25, 2024 20:28

Welcome Mr. Vijay and wish to serve our Tamil people without any disparity among them. Thank you. Jaihind


K.G.Gopinath Kannan
அக் 25, 2024 19:59

இவச டீ கூப்பன் வழங்கியதன் மூலம் நாங்களும் இலவசங்கள் தருவோம் என இப்போதே சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.


Ramesh Sargam
அக் 25, 2024 19:34

தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆம், அதில் மிக மிக கவனிக்கவேண்டியது மாநாட்டுக்கு வருவோர் எல்லோருக்கும் இலவச டீ கூப்பன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை