வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்போ அவ்வளவு தான் , Zeero
மேலும் செய்திகள்
சமையல் கலைஞருடன் அமெரிக்கா பறந்த கமல்!
18-Oct-2024
கோவை: கோவை மக்கள் சேவை மையம் சார்பில், 'மோடியின் மகள்' திட்டத்தில், தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்கு, தீபாவளி இனிப்பு, புத்தாடை,பட்டாசுவழங்கும் நிகழ்ச்சி, வடகோவை குஜராத் சமாஜ் பவன் அரங்கில், நேற்று மாலை நடந்தது.கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், ''பெண் குழந்தைகளிடம்உண்மை இருந்தால் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நன்றாக படித்து சாதிக்க வேண்டும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும்,'' என்றார்.பின், செய்தியாளர்களிடம் ராதிகா கூறுகையில், ''நாடு முழுக்க மதுக்கடைகளை ஒழிக்கும் முயற்சியை,மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.மாநில அரசு இது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். தீபாவளிக்கு இலக்கு நிர்ணயித்து, டாஸ்மாக் வியாபாரம் செய்வது வருத்தமளிக்கிறது.நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்கள் பணி செய்வதற்காக முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். அவரது முடிவு வித்தியாசமானது. அவரது கட்சி கொடி மங்களகரமான கொடி. பா.ஜ.,வை தாக்கி பேச யோசிப்பார். அவரது அரசியல் கண்ணோட்டமும், பார்வையும் வேறு,'' என்றார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் வாசுகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போ அவ்வளவு தான் , Zeero
18-Oct-2024