உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழ் பல்கலை வலைதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்ப்பு 

 தமிழ் பல்கலை வலைதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்ப்பு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தமிழ் பல்கலையை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர், பல்கலை வலைதளத்தில் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, தற்போது அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், தமிழ் பல்கலை, 1981 செப்., 15ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. இந்நிலையில், பல்கலை வலைதளத்தில், நோக்கு, போக்கு, செயல் பக்கத்தில் தமிழ் பல்கலை, 1981ல் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்., 15ல் தோற்றுவிக்கப்பட்டது என குறிப்பிட்டு இருந்தது. ஆனால், பல்கலையை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் மற்றும் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை. இது தொடர்பாக நம் நாளிதழில், ஜன., 1ல் செய்தி வெளியானது. இதையடுத்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின், பல்கலை வலைதளத்தின் வரலாற்று பக்கத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ர்குநாதன்
ஜன 09, 2026 14:07

பல்கலை பலகையில் 'தமிழ்ப் பல்கலை' என்று உள்ளது.


Yasararafath
ஜன 09, 2026 10:30

அருமை தமிழ் என்றால் சும்மாவா.? விட்டுவிட முடியுமா.?


V Venkatachalam, Chennai-87
ஜன 09, 2026 09:01

தினமலருக்கு வாழ்த்துக்கள்.


M S RAGHUNATHAN
ஜன 09, 2026 06:18

இப்போதாவது ஸ்டாலின் ஒரு குண இமயம் குன்று அல்ல என்று ஒப்புக்கொள்ளுங்கள். ராஜராஜனை மிஞ்சிய மகான்.


வாய்மையே வெல்லும்
ஜன 09, 2026 09:13

வாழ இனிமே வழியே கிடையாது தில்லாங்கடி பாய்ஸ் ஒழிக்கவேண்டிய மலேரியா ஜந்து .


Kasimani Baskaran
ஜன 09, 2026 03:59

திராவிடர்கள்தான் புதர் மண்டி கல்லுக்கிடையில் புதைந்து அழிய இருந்த தமிழை தோண்டி எடுத்து புதுப்பித்தார்கள். ஆசிரியர் என்று சொல்லக்கூட முடியாத அளவில் 40000 பேர் பணியில் இருந்து, 20000 மாணவர்கள் தமிழ் தேர்வை புறக்கணிக்கும் அளவுக்கு பயிற்றுவிப்பில் தமிழார்வம் தாண்டவமாடுகிறது.


Mani . V
ஜன 09, 2026 03:37

ஏன் இரும்புக்கை கோப்பால், இதுவும் தேர்தல் நாடகமா? ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதி பெயரை வைக்கத்தான் நாம் எம்ஜியார் பெயரை நீக்கினோம் என்பது பலருக்கும் தெரியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை