கூடுதல் டி.ஜி.பி., அருண் இடமாற்றம்
சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரும், கூடுதல் டி.ஜி.பி.,யுமான அருண், போலீஸ் அகாடமிக்கு நேற்று மாற்றப்பட்டார். தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக, மே 25 முதல், கூடுதல் டி.ஜி.பி., அருண் பணி புரிந்து வந்தார். இவர், நேற்று சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமிக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறையில் இவர் வகித்து வந்த பொறுப்பு, கூடுதலாக, அதே துறையில் ஐ.ஜி.,யாக பணிபுரியும் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.