உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம்; சொல்கிறார் திருமாவளவன்

ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம்; சொல்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம் இருப்பதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அழுத்தம் கொடுத்து என்னை யாரும் இணங்க வைக்க முடியாது. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது.ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அப்படி சொல்ல கூடாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ed6iuwno&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அவர் மீண்டும் விசிகவில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த வகையில், மழை, வெள்ள நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ. 5,000 வழங்கிட வேண்டும். கால்நடைகள், பொருள் சேதம் கணக்கீடு நடத்தப்பட்டு அவற்றுக்கேற்ப நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

சதி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: நம்மை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்று சதி நடக்கிறது. ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. நம்மைப் பற்றி பேசுவதில் சூது, சூழ்ச்சி இருக்கிறது. சதி வலை பின்னப்பட்டு வருகிறது. தி.மு.க.,வை ஒழிக்க திருமாவளவனை தூதாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பேசும் தமிழன்
டிச 16, 2024 08:15

அடிமையாக இருப்பதில் இவருக்கு எவ்வளவு தற்பெருமை பாருங்கள்.. எவ்வளவு தான்... நிலை வந்தாலும்.... அடிமையாகவே இருப்போம் என்பதை... எவ்வளவு நாசூக்காக கூறுகிறார் பாருங்கள்.


Siva Balan
டிச 15, 2024 23:03

விசிகவின் தயவில்தான் திமுகவே இருக்கிறது.


Dhanraj
டிச 15, 2024 21:27

நேரடியாக ஆதவ் அர்ஜுனாவை நீக்கி இருக்கலாமே. எதற்கு தேவையில்லாத பேச்சு...?


எவர்கிங்
டிச 15, 2024 20:56

அடங்க மறு !அத்து மீறு !! பிளாஸ்டிக் சேர் கண்டால் பொங்கி எழு!!!


Mohammad ali
டிச 15, 2024 20:06

போதும்! உங்க நாடகம் நீங்க யாருன்னு எல்லோருக்கும் தெரியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 19:40

ஒன்று ... வெள்ள பாதிப்பில் இருந்து மக்களைத் திசைதிருப்ப திமுக மற்றும் விசிக இணைந்து நடத்தும் நாடகம் .... அல்லது விசிகவை உடைக்க திமுக செய்யும் முயற்சி .... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வாய்ப்பு .....


பாலா
டிச 15, 2024 19:01

நாடக காதல், குளிரூட்டுக் கண்ணாடி, கட்டப்பஞ்சாயத்து, குடும்பங்களை அழித்தல் முன்னன் - மன்னனில்லை.


duruvasar
டிச 15, 2024 17:24

மறைமுக திட்டம் எதுவுமில்லை. உன்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கும் நேர்முக திட்டம்தான்.


கூமூட்டை
டிச 15, 2024 17:19

இது ஊசிப்போன குருமா மாடல்


குமரி குருவி
டிச 15, 2024 16:33

ஆதவ் ஐடியா ஆட்சி அல்லது வி.சி.க.திருமாவுக்கு அதிர்ச்சி...


புதிய வீடியோ