உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியின் சார்பில் வக்கீல் வரலட்சுமி என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில், சிறப்பு விசாரணைக்குழு அமைத்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் போது தங்களின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது.முன்னதாக, சிறப்பு விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தங்களது தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அ.தி.மு.க., கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.அண்மையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் போன போது, கேவியட் மனு அ.தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஜன 02, 2025 07:36

"கேவியட் மனு" இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கலாம் உங்கள் செய்தியில். எல்லார்க்கும் புரிய வாய்ப்பு இருக்கு


அப்பாவி
ஜன 02, 2025 05:53

அப்பாடா... நேரடியா சுப்ரிம் கோர்ட் போனதுக்கு வாழ்த்துக்கள். இல்லேன்னா முன்சீப் கோர்ட் தீர்ப்பை செசன்ஸ் கோர்ட் ரது செஞ்சு, அவிங்க திர்ப்பை ஹை கோர்ட் ரத்து செஞ்சு, அதை உச்சநீதி மன்றம் ரத்து செஞ்சு ஒரு முன்னூறு தடவை வாய்தா குடுத்து அந்த ஞான பிரியாணி சொகுசா வாழ்ந்து போய் சேந்துடுவான்.


Kasimani Baskaran
ஜன 01, 2025 21:59

காவல்துறை தன்னிச்சையாக பொது மக்களுக்கு விளக்கம் கொடுத்து விசாரணையின் சாரங்களை பொது வெளியில் தெரிவித்ததே தவறான அணுகுமுறை. ஆகவே நீதிமன்றம் முதலிலேயே வழக்கை நேர்மையாக நடத்த வாய்ப்பில்லை என்று புரிந்துகொண்டு சிபிஐ க்கு மாற்றி இருக்கவேண்டும்.


Barakat Ali
ஜன 01, 2025 19:32

அதிமுக அளவுக்கு இந்த விஷயத்தில், இது போன்ற அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையே பாஜக ???? உண்மையில் ரகசியக் கூட்டணி யார், யாருக்கு இடையில் இருக்கிறது ????


Dharmavaan
ஜன 01, 2025 18:45

உச்ச நீதிக்கு போவாரன்றால் கண்டிப்பாக அவர் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கும்


S S
ஜன 01, 2025 17:56

மாணவிக்கு நடந்தது கடுமையான குற்றம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் இந்த சம்பவத்தினை வைத்து அரசியல் செய்து தங்கள் கட்சியியை வளர்த்திட எதிர்கட்சிகள் முயல்வது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது


Kadaparai Mani
ஜன 01, 2025 19:30

இந்த வழக்கை உயர் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றவர் அந்த பெண் வழக்கறிஜர் .அதை பெரும்பாலான அடிமை ஊடகங்கள் மறைத்து விட்டன .


சம்பா
ஜன 01, 2025 17:17

நல்ல சம்பவம்


புதிய வீடியோ