உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்

நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்

கிருஷ்ணகிரி: நான்கு சுவர்களுக்குள் நடிகர் விஜய் கட்சி நடத்தி வருகிறார் என்று அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தலை அவர் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது; டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க.,வினர் சந்தித்தது, கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை. டில்லியில் கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலக கட்டடத்தை பார்வையிடுவதற்காக இ.பி.எஸ்., சென்றார். தமிழகத்தின் நலன், திட்டங்களை பெற மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் இல்லை. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. எங்களுடன் யார் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் செயல்பட தயாராக உள்ளோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், ஒரு தொண்டனாக இருந்து கூட பணியாற்றுவேன், கட்சி நலனே முக்கியம் என அண்ணாமலையும் பேசுவதும் அவரவர் கருத்து. இது குறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்பட்டதன் விளைவாக டெல்டா, ஓலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோன்றின. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்காண்டு காலங்களில் அது போல ஏதாவது ஒரு நிறுவனம் வந்ததா? தி.மு.க., த.வெ.க., ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி என நடிகர் விஜய் கூறியிருப்பது அவரது கருத்து. அவர் படங்களை கூட ரிலீஸ் ஆக விடாமல் தி.மு.க., ஆட்சியில் சிரமம் கொடுத்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் அவருக்கு அதுபோன்ற சிரமம் இல்லை. அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக அவர் பேசியுள்ளார். அதிலிருந்து வெளியில் வந்து அரசியல் ரீதியாக விஜய் பேச வேண்டும். ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். அவரை அடையாளம் கண்ட திருமாவளவன் அவரை ஒதுக்கி வைத்தார்.சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய், அவர் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே கட்சியை நடத்தி வருகிறார். மக்களை சந்தித்து அரசியல் செய்யும் பட்சத்தில் அரசியலை புரிந்து கொண்டு அவரும் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rengaraj
மார் 29, 2025 15:31

விஜய்க்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் , திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பது. அப்போதான் திமுக மீண்டும் ஜெய்க்கும் . அடுத்தகட்டமா விஜய் வளரனும் அதற்கு விஜய்க்கு குடைச்சல்கள் கொடுத்தால்தான் த வெ க வளரும்னு திமுக நினைக்குது. அதனால் கட்சிக்கூடங்களுக்கு ஏகப்பட்ட தடைகள். மீம்ஸ் போட்டாலே ஒருத்தரை கைது செய்யும் திமுக , தன்னை காறித்துப்பிக்கொண்டிருக்கும் சீமானை எதுவுமே செய்யாமல் இருக்கும் காரணம் என்ன விஜயிடம் அவர் எப்படியாவது போகவேண்டும் என்பதற்காகத்தான். சீமான் விஜய் பக்கம் போகவில்லை. திமுக சொல்லித்தான் திருமா டபுள் கேம் ஆடுறார். ஆதவ் அர்ஜுனாவை அனுப்பிவிட்டு விசிகாவுக்கு எப்படி வரவேற்பு இருக்கும்னு ஆழம் பார்க்கிறார். திருமாவும் எங்கே தனக்கு சீட் அதிகம் கிடைக்கும்னு காத்திருக்கிறார். அதனாலேயே இங்கே திமுகவில் தோழமை சுட்டுதல் மட்டும் சொல்லிக்கொண்டு சீட் அதிகம் கிடைக்குமான்னும் அடக்கி வாசிக்கிறார். விஜயும் திருமா வருவார்னு கடையை விரிச்சு பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்போ வரைக்கும் வரவில்லை. அண்ணாதிமுகவோடு பேசி பார்த்தார். அவர்களும் பிடிகொடுக்கவில்லை இப்போ கம்யூனிஸ்டுகளை அழைக்கிறார். மொத்தத்தில் திமுகவின் எதிர் ஓட்டுகள் மொத்தமாக விஜய்க்கே போகணும் , தாங்கள் ஜெயிக்கணும் அப்ப்டிங்கறதுதான் திமுகவின் எண்ணம். . பிரிந்து கிடக்கும் அண்ணாதிமுகாவை மேலும் பலவீனப்படுத்தவே திமுக விரும்புகிறது. அதனால் பாஜகவுடன் சேரவிடாமல் தடுக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணாதிமுக அமைச்சர்கள் ஊழல் வெளிவரும் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் அண்ணாதிமுக அமைச்சர்கள் மீது நான்கு ஆண்டுகாலம் ஆகியும் வழக்குகள் ஒன்றும் இல்லை. இதை அதிமுக தற்போது பு ரிந்துகொண்டுவிட்டது நேற்றுவரை விஜய் அதிமுகவை பற்றி பேசவில்லை . இப்போ அண்ணாதிமுக விஜயை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது. திமுகவின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.


Rengaraj
மார் 29, 2025 14:43

விஜய்க்கு அரசியல் பாடம் யாரவது நன்றாக எடுக்கவேண்டும். சினிமா மாதிரியே வசனம் பேசிட்டே இருக்குறாரு பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்னு சொல்றார் , ஓகே. , அப்போ எங்க விமானநிலையம் அமைக்கலாம் , இதை சொல்லமாட்டேங்குறாரே ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கணும்ங்கிறாரு அது இன்னைக்கு இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புமாதிரிதானே அதை எடுத்து என்ன செய்யணும்னு சொல்லமாட்டேங்கறாரு ஆனா தொகுதி சீரமைப்பு மட்டும் அம்பது வருஷத்துக்கு முன்னால இருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இருக்கணும்கிறாரு ஒன்னுக்கொன்னு முரணா தெரியலையா ? எல்லோரும் கூவறாங்க , நாமளும் கூவி வைப்போம் அப்பிடீங்கிற மாதிரி இருக்கு இலங்கை தமிழ் மக்கள் தேவை பற்றி இங்க தீர்மானம் போட்டா , அதை எப்படி நிறைவேற்றுவார் இவருக்கு அவ்வளவு பவர் இருக்கா ? மொத்தத்தில் யாரோ கட்சி நடத்த கொடுக்கற காசுக்கு விஜய் நல்லா ஈவென்ட் மேனேஜ்மென்ட் பன்றாரு அவரை பொறுத்தளவில் சினிமா மாதிரி த. வெ க வும் ஒரு ப்ராஜெக்ட் அவ்வளவுதான் கல்லா கட்டிக்கிட்டு போயிட்டே இருக்கவேண்டியதுதான்


Jay
மார் 29, 2025 14:34

திமுக கொடுத்த மாதிரி தவேக 25 கோடி கொடுத்தால் அவர்களுக்காக குரல் எழுப்பக்கூடியவர்கள் தான் இந்த கம்யூனிஸ்டுகள்.


Narasimhan
மார் 29, 2025 14:08

நீங்க நான்கு எல்லையில் கட்சி நடத்தி என்ன கிழித்தீர்கள். அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாக உங்கள் கட்சியை பின் தள்ளி விடும். பொறுத்திருந்து பாருங்கள். ஒரு பழைய முதலமைச்சரை படு கேவலமாக நடத்துகிறீர்கள். நீங்கள் மண்ணை கவ்வப்போவது உறுதி


Anantharaman Srinivasan
மார் 29, 2025 14:07

உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.,வினரை அழைத்து ED cases சை காட்டி, கூட்டணிக்காக மிரட்டி அனுப்பியுள்ளது தான் உண்மை.


Anantharaman Srinivasan
மார் 29, 2025 14:02

முனியா.. இதே விஜய் கட்சியிடம் அதிமுக கூட்டணி பற்றி பேசியதுண்டா இல்லையா..?


Kasimani Baskaran
மார் 29, 2025 13:32

நாலு அணியாக சிதறிக்கிடக்கும் அதிமுக வுக்கு இது தேவையில்லாத விஷயம்...


Madras Madra
மார் 29, 2025 13:22

ஜோசப் விஜய் மத மாற்றும் கும்பலின் ஏஜென்ட் ஏசு சபை ஏவி விட்டிருக்கும் ஒரு அரசியல் கூலி ஒரு கிறிஸ்துவ ஆட்சியை தமிழகத்தில் நிறுவுவதே குறிக்கோள் இதெல்லாம் மாரிதாஸ் அவர்கள் யு tube செய்தி உண்மையாக இருக்குமோ ?


Ramesh Sargam
மார் 29, 2025 13:10

விஜய் நடித்து வெளிவரும் படங்கள் நான்கு சுவர்களுக்குள் திரையிடப்படும். அதுபோல தன்னுடைய கட்சியையும் நடத்துகிறார். அவ்வளவுதான்.


Palanisamy Sekar
மார் 29, 2025 12:43

ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவர் புதிதாக அரசியலுக்கு அதிலும் ஒரு கட்சியை ஆரம்பித்துக்கொண்டு வருகின்றார் என்றால். கொஞ்சமேனும் அரசியலில் அறிவை வளர்த்துக்கொண்டு வருவதுதான் சரியானது. முறையானதும் கூட. ஆனால் இந்த நடிகர் விஜய் அரசியலில் அரைகுறை என்பதை தனது ஒவ்வோர் பேச்சிலும் பளிச்சிடுகின்றார். மும்மொழி கொள்கையை பற்றி புரிந்துணர்வு இல்லாமல் இருமொழி கொள்கையை பேசுகின்றார். ஆனால் அவரது பள்ளியில் மும்மொழியை திணிக்கின்றாரே இது சரியா? யோசிக்காமல் உளறிக்கொண்டு பேசுகின்றார். அடுத்து மத்திய அரசாங்கம் எங்கும் எப்போதுமே மும்மொழியை திணிக்கவே கிடையாது என்கிறபோது முரசொலியை படித்துவிட்டு பேசுகின்றார் அதுவும் எங்கே? தனது பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில். இவரே இப்படி என்றால் இவரது பேச்சை கேட்கும்போது அவர்களின் அரசியல் அறிவை பற்றி சொல்லவே வேண்டாம். ஹாஃப் பாயில் அரசியல் வாதி விஜய் என்று இனி தாராளமாக அவரை அழைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை