உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்லியில் ஸ்டாலினுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: தம்பிதுரை காட்டம்

பார்லியில் ஸ்டாலினுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: தம்பிதுரை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை கூறி உள்ளார். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. பார்லியில் கனிமவள மசோதாவுக்கு அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை ஆதரித்து பேசியதாக தி.மு.க.,கூறி வருகிறது. இதே குற்றச்சாட்டை அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அவை உறுப்பினர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலினும் முன் வைத்தார். அதற்கு அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது; டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வர நான் தான் காரணம் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை முழுமையாக மறுக்கிறேன். தமிழக சட்டசபையில் உறுப்பினர் அல்லாத என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் கூறி உள்ளார். எனவே, அவர் மீது பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Alagusundram Kulasekaran
ஜன 14, 2025 05:34

தமிழக முதல்வர் நடவடிக்கை எடுங்கள்


RAMESH
ஜன 13, 2025 15:45

நோட்டீஸ் கொடுத்து உதவாக்கரை மனிதரை வீட்டிற்கு அனுப்புங்க சார்....கேடு கெட்ட ஆட்சி இந்த ஆட்சி


anonymous
ஜன 13, 2025 07:32

ஒரு இரவில் எல்லாவற்றையும் சரி செய்யும் திறமையுள்ளது. கருணாவின் வாரிசல்லவா...


Mani . V
ஜன 13, 2025 05:51

பிரயோசனமில்லை. திமுக வின் கூட்டணிக் கட்சி பாஜக. அதுனால No use


Mediagoons
ஜன 13, 2025 01:40

அடிவருடி செய்ய வேண்டிய கட்டாயம்


Indian
ஜன 12, 2025 21:26

ஹாலிவுட் நடிகன் கூட தோத்து போயிடுவான்


sankaranarayanan
ஜன 12, 2025 21:04

தம்பியாகிய தம்பித்துரை அண்ணனாகிய அண்ணான் முதல்வர் ஸ்டாலின் மீது பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருப்பதை வரவேற்கக்கூடியதுதான்.எதை வேண்டுமானாலும் பேரவையில் பேசலாம் என்ற நியதிக்கு இது ஒரு பெரிய சவாலாகவே இது இருக்கும் .எப்போது பாராளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 20:59

இவர் மேலவை உறுப்பினர் தான். பார்லியில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க முடியாது. மேலும் இவர் சுரங்க உரிமைச் சட்டத்தை ஆதரித்துப் பேசியது அவை குறிப்பில் இருக்கிறது. நோட்டீசுக்கு எளிதில் பதில் கொடுத்து இவரை off பண்ணிவிடுவார்கள்.


ஆரூர் ரங்
ஜன 12, 2025 21:57

அப்போ ராஜ்யசபை பார்லிமெண்டில் இல்லையா? ஆக இன்றைய 200 கட் ..


Ray
ஜன 12, 2025 22:07

வெத்து சவடால் இவர் முன்னாள் Union Cabinet Minister, Law, Justice and Company Affairs, and Ministry of Surface Transport Additional ge MAR. 1998- APR. 1999 ராமா ராமா


Ray
ஜன 13, 2025 01:07

இப்போ ராஜ்ய சபை மோடி பார்லிமென்ட்டில் இல்லங்கறது கூட தெரியாதா ரங்கா? இவ்ளோதானா


Bala
ஜன 12, 2025 20:18

சபாஷ் சரியான போட்டி


சமீபத்திய செய்தி