உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு அருகே கிழிந்த நிலையில் விவரங்கள் கிடந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்தீஷ் யார் என்று அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க., சார்பில் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது; டாஸ்மாக் எம்.டி., வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் தி.மு.க.,வின் புதிய Power Center-ஆ?Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை. இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Haja Kuthubdeen
மே 17, 2025 07:59

மீண்டும் மீண்டும் யார் அந்த சார்.....


Kasimani Baskaran
மே 17, 2025 07:23

செபாவுக்கு பயிற்சி கொடுத்து திறமையை மெருகேற்றியதில் ஆத்தா தீம்க்காவுக்கு சிறப்பான இடம் உண்டு. அதற்க்கு மேல் அவர்களுக்கு தொடர்பு கிடையாது.


Kasimani Baskaran
மே 17, 2025 06:53

சலவை செய்ய உதவி செய்திருக்கிறார்கள்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 17, 2025 06:46

சார்


முக்கிய வீடியோ