உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறங்கி வந்தார் இ.பி.எஸ்.! தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பதவி

இறங்கி வந்தார் இ.பி.எஸ்.! தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,வில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.,வில் தளவாய் சுந்தரம் அனைவரும் அறியப்படும் நபராக உள்ளவர். பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் இவரும் ஒருவர். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அ.தி.மு.க., வாகை சூடாத போதும் தமிழக அரசின் டில்லி பிரதிநிதி என்ற பொறுப்பை அவருக்கு இ.பி.எஸ்., வழங்கினார். தற்போது அவர், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nluossx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியில் முக்கிய முகமாக இருந்த அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும் கடந்த அக்டோபர் 8ம் தேதி நீக்கப்பட்டார். அவரின் நீக்கத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கோஷ்டி சண்டை ஒரு காரணம் என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.,பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தது பிரதான காரணமாக முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரண்பட்ட வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும், கிடைத்த தகவல் அடிப்படையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தற்காலிகமாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அப்போது இ.பி.எஸ்., கூறி இருந்தார்.இந்நிலையில், தன் தரப்பு விளக்கத்தை தலைமைக்கு தளவாய் சுந்தரம் தெளிவாக கூறினார். அதன் மூலம், தளவாய் சுந்தரம் மீது தவறு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்ட இ.பி.எஸ்., பறிக்கப்பட்ட பதவிகளை அவருக்கு மீண்டும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டு உள்ளது.பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வழக்கம் போல் சுறுசுறுப்புடன் தமது கட்சி பணிகளை அவர் தொடங்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Yasararafath
நவ 23, 2024 17:02

வாழ்த்துகள் தளவாய் சுந்தரம்


K.Ramakrishnan
நவ 19, 2024 22:55

தளவாய் சுந்தரம் மா.செ. ஆக இருந்தபோது தான் கன்னியாகுமரியில் அதிமுக டெபாசிட் பறிபோனது. இவருக்கு மீண்டும் பொறுப்பு கொடுத்தால் டெபாசிட்டையாவது தக்க வைப்பாரா?


Anantharaman Srinivasan
நவ 18, 2024 22:57

காற்று வந்ததும் இலை அசைந்ததா இல்லை இலை அசைந்ததால் காற்று வந்ததா..?? தளவாய் சுந்தரம் கொடியசைத்து துவக்கிவைத்தது சரியா தவறா.. ? கேள்விக்கென்ன பதில் பழனி.?


வைகுண்டேஸ்வரன்
நவ 18, 2024 21:20

பாஜக வுடன் தமிழ் நாட்டில் யார் சேர்ந்தாலும், கிடைக்கிற ஓட்டு கூட கிடைக்காமல் போய் விடும் அளவுக்கு கட்சி பேரை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.


ngm
நவ 19, 2024 09:39

mgr, jj இருந்த வரை உன் எசமான் கட்சியால் ஒண்ணும் முடியல. உன்ன மாதிரி எட்டப்பன் கொத்தடிமை சும்மா கதற வேண்டியதுதான்


Natarajan
நவ 18, 2024 21:16

அவர் மாடி படிவழியாக இறங்கி வந்தார்


M Ramachandran
நவ 18, 2024 20:25

பழனிக்கு காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் அட்ரஸ் காணாமல் போய் விடும். இப்போது தான் சூடு சிறிது உரைக்க ஆரம்பித்திருக்கு.


Sundar
நவ 18, 2024 20:03

இதன் மூலம் BJP கூட்டணிக்கு தயார் செய்து கொண்டார்.


sankaranarayanan
நவ 18, 2024 18:47

இதேபோன்று கைவிடப்பட்ட பாரதீய ஜனதா பார்ட்டியுடனும் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் உமது ஆட்சி திரும்பும் இல்லையேல் உங்களது ஆட்சி என்பதே இனி இருக்காது கூட்டணி பாரதிய ஜனதா பார்ட்டி -விஜய் பார்ட்டி - பாமக - இவர்களுடன் அமைத்தால் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்


saravan
நவ 18, 2024 18:32

தம்பி சின்னபிள்ளைங்க வெள்ளாமை ஊர்வந்து சேராது....பார்க்கத்தானே போற நடக்கப்போகும் கூத்த


S Ramkumar
நவ 18, 2024 18:08

அப்ப அதிமுக ஆர் ஸ் எஸ் க்கு கூட்டத்துக்கு கொடியசைத்து தொடங்கி வைத்த தலைவன் செயலை சரி என்று ஒத்து கொண்டு விட்டதா? இல்லை தளவாய் செயல் கண்டிக்க பட்டதா.


முக்கிய வீடியோ