உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளம்பர அமைச்சர் மகேஷ்: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

விளம்பர அமைச்சர் மகேஷ்: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: ''நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர் மகேஷ்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் வகுப்பறையில் மயங்கி கிடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்கை நம்பி மட்டுமே, மொத்த அரசும் இயங்கும், தி.மு.க., ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும். கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களை கொண்ட சமூகத்தில், மாணவர் கைகளில், பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படி தடுக்க முடியும். இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும், பள்ளிக்கல்வித் துறையையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் குறித்து, எந்த கவலையும் இல்லாமல், 'பள்ளிக் கல்வித் துறை என் கோட்டை' என, சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் அமைச்சர் மகேஷ். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர். தமிழகத்தின் கல்வி தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும், தி.மு.க., அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.V.Srinivasan
ஜூலை 09, 2025 08:40

முதல்ல இந்த ஆளு கல்வி மந்திரியா இருக்க இந்த ஆளோட தகுதி என்ன. படிப்பு வாசனை இருக்கான்னு கொஞ்சம் விசாரிங்கப்பா.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 09, 2025 06:38

கல்விச் சாலைகள் பாலைவன சோலைகளாக மாறிப்போனதே திமுக அரசின் சாதனையாகும். மாணவர்கள் எது படிக்க வேண்டும் எது படிக்க கூடாது என்று தினந்தோறும் விவாதம் நடந்து கொண்டு இருந்தால் மாணவர்கள் எப்படி கல்வியில் கவனம் செலுத்துவார்கள். ஒரு மொழி அதனை படிக்க கூடாது என்று சொல்ல ஒரு தனி மனிதன் அவர் முதல்வாராகவே இருந்தாலும் என்ன உரிமை உள்ளது. ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டம். உலகின் மிக மூத்த மொழி செம்மொழி என்று கூறுவதென்றால் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. உலகின் மிக மூத்த மொழி எப்படி இன்னொரு மொழியால் அழிந்து விடும். பரந்த மனப்பான்மை தமிழர்கள் இடையே இல்லை என்பதையே இது காட்டுகிறது. தாராவி பகுதியில் வாழும் தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் எப்படி அங்கு அவர்கள் வாழ முடியும். அதேபோல் இங்கு வந்து வாழ்க்கை நடத்தும் வட மாநிலத்தவர் எப்படி தமிழ் கற்றுக் கொள்ளாமல் வாழ முடியும். கேரளாவில் வேலை வாய்ப்பு தேடி அங்கு பணி செய்யும் பல தொழிலாளர்கள் மலையாள மொழி சரளமாக பேசுகின்றனர். மலையாளம் தெரிந்ததால் தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் அவர்களால் சுலபமாக பணி செய்து சம்பாதிக்க முடிகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் செயல் திறன் மிக்க இளைஞர்களாக உள்ளனர். Non skilled இளைஞர்கள் மிகவும் குறைந்து போய் விட்டனர். Skilled இளைஞர்கள் அனைவருக்கும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. அவர்கள் வெளி நாடு வேறு மாநிலம் சென்றால் மட்டுமே அவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு பெற முடியும். வெளி நாடு செல்ல ஆங்கிலம் தெரியும். அனைவராலும் வெளி நாடு செல்ல முடியாது. ஏனென்றால் அதற்கு பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் வெளி மாநிலம் செல்ல பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை. திறமை மட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் மொழி தெரிந்தால் போதும். அதை தர வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை அல்லவா. எப்படி ஒரு அரசாங்கம் அதை தர மறுக்க முடியும். தயவு செய்து கனிம வள அரசியலை கல்வியில் காட்ட வேண்டாம் என்பதே திராவிட கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்


முக்கிய வீடியோ