உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி

தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி

சென்னை: சென்னையில் மின்மீட்டர் தவறான கணக்கீட்டை காட்டுவதை நிரூபித்து ரூ.30,000 இழப்பீட்டை பெண்மணி ஒருவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பெற்றுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னையைச் சேர்ந்தவர் ருக்குமணி. கடந்த 2023ம் ஆண்டு இவரது வீட்டுக்கு மின் கட்டணம் மிக அதிகமாக வந்துள்ளது. இந்த கட்டணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர், அவரது மின் கணக்கீட்டை சரிபார்த்து, மின்வாரிய அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், மின்சார மீட்டர் நல்ல நிலையில், சரியாக தான் வேலை செய்கிறது, மின் கணக்கீட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறினர்.அடுத்த 2 முறையும், மின் கட்டணம் கணக்கிடும் போது முன்பை போலவே அதிக முறை பயன்பாடும், கட்டணமும் வந்துள்ளது. எங்கோ எதிலோ தவறு இருப்பதாக உணர்ந்த அந்த பெண்மணி, உடனடியாக குறைநீர் மையத்தை நாடியுள்ளார்.இதையடுத்து, அவர் வீட்டின் மின் மீட்டர் சம்பந்தப்பட்ட பரிசோதனைக் கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மீட்டரில் கோளாறு இல்லை என்று மீண்டும் அதே பதில் சான்றிளிக்கப்பட, ஏகத்துக்கும் குழம்பி போனார். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக லிமிடெட் அதிகாரிகள் கூறியபடி, வீட்டில் உள்ள மின் வயர்கள், இணைப்பு என அனைத்தையும் சோதனை செய்தார். அதில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மின்கசிவு இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் இதை மேற்கொண்டார்.பின்னர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தப்படி கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு தமது வீட்டின் மின்சார மீட்டரை ருக்குமணி பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார். இப்போது 3வது முறையாக மீட்டர் பரிசோதிக்கப்பட்டது.அந்த பரிசோதனை முடிவில் மின் மீட்டரில் கோளாறு இருப்பது உறுதியானது. இந்த காலக்கட்டத்துக்குள் ருக்குமணி, மின் கட்டணமாக ரூ.30,000 வரை செலுத்தி இருந்தார். ஆனால், எந்த சத்தமும் காட்டாமல், புதிய மின் மீட்டரை பொருத்திய மின்சார வாரியம், செலுத்தப்பட்ட மின்கட்டணம் பற்றி மூச்சுவிடாமல் இருந்துள்ளது.தமக்கு ஏற்பட்ட இழப்பீடு மற்றும் சேவை குறைபாட்டுக்காக குறைநீர் மையத்தின் கதவுகளை தட்டினார் ருக்குமணி. அவரின் கோரிக்கையை விசாரித்த குறைதீர் ஆணையம், ரூ.30,000 இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்டது. தமது வீட்டின் மின் மீட்டர் பழுதானது என்பதை நிரூபிக்க நுகர்வோரான ருக்குமணி ஓராண்டு போராடி, அதற்கான இழப்பீட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ethiraj
மார் 28, 2025 06:30

If HT metering of all distribution transformers is done on monthly basis govt will come to know how much theft or unmetered supply takes place will be known. Govt ,boards engineers and consumers scam will be exposed


Murugesan
மார் 23, 2025 22:55

Sir We pay current bill every month 3k to 8k.Meter not working properly.Several time intimated like JE,AE,CM cell,EB head office.Our house current incoming is 250 volt.Any way not answered officially side.I am not big political background.What can I do?We are more difficulty pay the large amount.Please consider my humble request sir.


rama adhavan
மார் 23, 2025 13:04

தனியார் மயம் ஒப்படைக்க வேண்டும். தனியார் தான் குஜராத்தில் மின்சாரத்தை நிர்வாகிக்கின்றனர். தவறோ, ஊழலோ, லஞ்சமோ துளியும் இல்லை.


P.Sathish Kumar
மார் 22, 2025 21:28

நாங்கள் புதிதாக வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளோம். வாடகைக்கு வந்து முதல் பில் 54 ரூபாய் கட்டினோம். இப்போது மீட்டர் ரிப்பேர் ஆகி விட்டது மற்றும் 16,000 ரூபாய் மின்கட்டணமாக வந்துள்ளது. ஆபிசில் கேட்டால் கடைசி 12 மாத சராசரி பில் தொகையாக வந்துள்ளது என்கிறார்கள். அவர்கள் பில் தொகையை போர்ட்டலில் குறைக்க முடியவில்லை என்கிறார்கள். இதை எவ்வாறு ரிப்போர்ட் செய்வது?


Nandakumar Naidu.
மார் 22, 2025 20:40

கேடு கெட்ட ஆட்சி.


R S BALA
மார் 22, 2025 17:18

தவறான மீன்மீட்டரால் 30000 தொகைக்கு அதே 30000 தான அலைக்கழிப்புக்கு ஒரு லட்சம் கொடுக்கவேணாமா..


ramesh
மார் 22, 2025 13:15

சென்னையில் மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தில் லஞ்சம் கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகளால் லட்ச கணக்கில் வாங்க படுகிறது .வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் கட்ட மின் இணைப்பு கொடுக்க மற்றும் கட்டட அனுமதிபெற எத்தனை சமையல் அறை உள்ளது என்று கேட்டு அதற்கு ஏற்ப லட்ச கணக்கில் லஞ்சம் வசூலிக்க படுகிறது . இல்லை என்றால் நமது இடத்தில அனுமதி பெறவோ கட்டடம் கட்டவோ முடியாது என்ற கேவலமான நிலை உள்ளது . ஆனால் எங்கள் நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகளில் கவுன்சிலர்கள் தொல்லை எங்கும் இல்லை . அதிகாரிகள் லஞ்சமும் இவளவு அதிக படியாக இல்லை . இதை கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தற்போதய முதல்வர்கள் வரை யாராலும் கண்டிக்க படவும் கட்டுப்படுத்த படவும் இல்லை . கவுன்சிலர்கள் இல்லை என்றால் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்துடன் முடிந்து விடும். ஆனால் கவுன்சிலர் இல்லாத நேரத்தில் அந்த தொகையும் அதிகாரிகள் கிடைத்தது லாபம் என்று சேர்த்து வாங்கிய நிலை ஏற்பட்டது .இவர்களை கட்டு படுத்தினால் தான் வரும் தேர்தலில் திமுக வுக்கு வரும் சட்ட சபை தேர்தலில் மக்களின் எதிர்ப்பை குறைக்க முடியும் . நான் dmk ஆதரவாளராக இருந்தாலும் உண்மை நிலையை எழுதுகிறேன்


Vijay Kumar
மார் 22, 2025 13:00

சரிதான் இதர சார்ஜ்ஸ் எதற்கு கமேற்சியல் இணைப்புக்கு ????


Varadarajan Nagarajan
மார் 22, 2025 12:55

மின்வாரிய ஒயரிங் அல்லது நுகர்வோர் ஒயரிங்களில் சிறு பிரச்சனையை இருந்து நீயூட்ரலுக்கும் எர்த்துக்கும் இடையில் மின் அழுத்தம் இருந்தாலும் அல்லது எர்த் கனெக்ஷன் வழியாக சிறிது லீக்ககேஜ் கரண்ட் இருந்தாலும் இந்தவகை டிஜிட்டல் மின்மீட்டர்கள் தவறாகத்தான் பதிவுசெய்யும். மின் வாரியம் எப்பொழுதுபோல் மீட்டரை டெஸ்ட் செய்தோம் அதில் ஒன்றும் குறையில்லை என கணக்கு காட்டுவார்கள். பிரச்னை என்னவென்று பார்த்து சரிசெய்வது அவர்கள் பழக்கமல்ல. எல்லாம் சரியாகத்தான் உள்ளது என சத்தியம் செய்வதுதான் அவர்கள் வழி. நான் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபொழுது இதுபோன்று போராடி பிரச்னையை அவர்களை சரிசெய்யாவைத்துள்ள அனுபவம் உள்ளது


Prabhakaran Rajan
மார் 22, 2025 12:24

வாழ்த்துக்கள் சகோதரி


புதிய வீடியோ