உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி கல்லுாரிக்கு மீண்டும் 100 சீட்

கன்னியாகுமரி கல்லுாரிக்கு மீண்டும் 100 சீட்

சென்னை:நில பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்ட கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லுாரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப வழங்கியுள்ளது.முதல் சுற்று கவுன்சிலிங்கின் போது, கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லுாரி வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமை கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒருவர் மனு தாக்கல் செய்தார். இதனால், அக்கல்லுாரிக்கு அனுமதிக்கப்பட்டிருந்த, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை, தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றது.அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், ஐந்து மாணவர்கள், அக்கல்லுாரியில் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு வேறு கல்லுாரியில் இடம் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், கல்லுாரி தரப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, அக்கல்லுாரிக்கான, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை, தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப வழங்கியுள்ளது. அதில், 95 இடங்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, அங்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்படும் என, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை