அகஸ்தியர் கட்டுரை போட்டி
சென்னை:'காசி தமிழ் சங்கமம் 3.0' வின் மைய கருத்தான அகஸ்தியரின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரியின் அறிவிப்பு:அகஸ்தியரின் பிறந்த நாளான மார்கழி ஆயில்ய நட்சத்திர நாள், தேசிய சித்த மருத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.அவரது சிறப்புகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'அருந்தமிழ் கண்ட அகஸ்தியர்' என்ற தலைப்பிலும்; கல்லுாரி மாணவர்களுக்கு, 'அகஸ்தியர் காட்டும் அறிவியல்' என்ற தலைப்பிலும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கட்டுரை போட்டிகளை நடத்துகிறது.கட்டுரைகளை, ஐந்து பக்கங்களுக்குள் தட்டச்சு செய்து, தலைமை ஆசிரியர் அல்லது கல்லுாரி முதல்வர் கையொப்பத்துடன், பிப்., 5ம் தேதிக்குள், 'பதிவாளர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600 100' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வாகும் கட்டுரைக்கு முதல் பரிசாக 30,000, இரண்டாம் பரிசாக 20,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு https://cict.in/cict2023/kts/ இணையதளத்தை பார்வையிடவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.