உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயது ஒரு தடையில்லைங்க... நீட் தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்.,க்கு விண்ணப்பம்!

வயது ஒரு தடையில்லைங்க... நீட் தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்.,க்கு விண்ணப்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தாண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3 பேர் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ மருத்துவக் கல்லூரிகளில், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர முடியும். அதே நேரத்தில், தகுதித் தேர்வு எழுதுவதற்கு வயது தடையில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது, எத்தனை முறை வேண்டுமானாலும் தகுதி தேர்வு எழுதலாம். நடப்பாண்டில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, 60 வயதை கடந்த 2 வழக்கறிஞர் உட்பட 3 மூத்த குடிமக்கள் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். இது எந்த முயற்சிக்கும் வயது தடையில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்து உள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட பல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஹோமியோபதிகள், சித்த மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற வல்லுநர்கள் உட்பட குறைந்தது 25 பேர் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என மாநில தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு, மருத்துவம் அல்லது பல் மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர அதிகமான பட்டதாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 2017ம் ஆண்டுக்குப் பிறகு, இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். அதிகமான மூத்த குடிமக்கள் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இளைய வேட்பாளர்களுடன் போட்டியிட அவர்களுக்கு போதுமான மதிப்பெண்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் சிலர் 69% இடஒதுக்கீடு பிரிவின் கீழ் ஒரு இடத்தைப் பெறக்கூடிய மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். அவர்கள் அரசு கல்லூரியில் படிக்க அரசு அனைத்து உதவிகளும் செய்கிறது.மூன்று மூத்த குடிமக்களும் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பித்தனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் இலவசமாக மருத்துவம் படிக்க கட்டணங்களை அரசே செலுத்துகிறது. தங்கும் கட்டணங்களை அரசு ஏற்று கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்., படிக்க விண்ணப்பித்துள்ளது கல்விக்கு வயதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VSMani
ஜூலை 13, 2025 14:50

பேரன் பேத்திகளின் பிள்ளைகளை கைகளில் எடுத்துக் கொஞ்சும் வயதில் புத்தகத்தை கையிலே எடுத்து படிப்பது ஆச்சர்யம்தான். இனி இவர்கள் 5 1/2 ஆண்டுகள் படித்து MBBS மருத்துவர்களாகி பின்னர் நீட் எழுதி பாஸ் பண்ணி மீண்டும் 3 வருடங்கள் MD படித்து மருத்துவர் ஆவதற்குள் ..... இவர்கள் எத்தனை ஆண்டுகள் மருத்துவ சேவைகள் செய்ய முடியும்?


Padmasridharan
ஜூலை 13, 2025 14:04

கல்விக்கு வயதில்லை. ஆனா வேலை தருவதற்கு வயதை பார்க்கிறார்கள் அல்லவா..


visu
ஜூலை 13, 2025 18:01

டாக்டர் தானா கிளினிக் நடத்தலாம் ஜுரம் சளி தலைவலிக்கு மருந்து கொடுக்க மருத்துவர்கள் இல்லை.இவர்களை போன்றவர்கள் கிராமங்களில் சேவை செய்ய முன்வருவார்கள்.


panneer selvam
ஜூலை 13, 2025 13:56

It is nothing but mockery of tem . They should bring age limit for admission on medical education . Just think , after 60 , you enroll into medical education which will take about 7 years . After 67 , how many years they could practice . Please do not destroy the future of young generation .


உண்மை கசக்கும்
ஜூலை 13, 2025 13:44

வசூல் ராஜா எம் பி பி எஸ்.


ஆரூர் ரங்
ஜூலை 13, 2025 13:30

அப்படியே அரசு டாக்டர் வேலையும் அதற்கு பென்ஷனும் கொடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை