உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14,000 ஏக்கர் குறுவை பாதிப்பு; உறுதி செய்தது வேளாண் துறை

14,000 ஏக்கர் குறுவை பாதிப்பு; உறுதி செய்தது வேளாண் துறை

சென்னை: டெல்டா மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த 14,000 ஏக்கர் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை, வேளாண் துறை உறுதி செய்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்தது. இதனால், அதிகளவில் நெல் உற்பத்தியானது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல், உணவு துறை தாமதம் செய்தது. இதனால், நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு வெளியே, நெல் மூட்டை கள் குவித்து வைக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், அதில் நனைந்து, நெல் மணிகள் முளைத்தன. மேலும், தாமதமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் மழையில் சிக்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல்மணிகள் வீணாகின. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால், விவசாயிகள் விரக்தி அடைந்தனர். குறுவையை தொடர்ந்து நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களும் பாதிக்கப்பட்டன. வேளாண் துறை உத்தரவுப்படி, டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பின்படி, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, 14,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழுமையாக பாதித்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

duruvasar
நவ 11, 2025 09:10

இதுவரை எந்த புகாரும் வரவில்லை என படித்துவிட்டு போய்விடுவார் டெல்டாகாரரின் மகன்


raja
நவ 11, 2025 07:21

விவசாயிகள் திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது அவர்களின் சிரிப்பிலிருந்தே அறிந்து கொண்டு உவகையுடன் இருக்கிறேன் என்று முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லுவாரு பாரு தமிழா விடியல் வேண்டும் என்று ஓட்டு போட்டு உக்காத்தி வச்ச உனக்கு செம கமடியா இருக்கும்.. அதில் உன் வருத்தம் எல்லாம் பறந்தோடி மிக மகிழ்ச்சியுடன் இருப்பாய்...


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 07:13

தாமதமாக சாகுபடி செய்யப்பட்டதே பாதிப்பிற்கு காரணம்- தமிழக வேளாண்மைதுறை புயல் உருவான உடனே மழை பெய்ததே பாதிப்பிற்கு காரணம்- தமிழக வேளாண்மை அமைச்சர் நெல் உரிய முறையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது- உணவு அமைச்சர் எந்த கொம்பனும் குறைசொல்லமுடியாத ஆட்சி - பொம்மை முதல்வர் பொதுமக்கள் - ????????????????


Ramesh Sargam
நவ 11, 2025 06:56

பொறுங்கள், மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டிருக்கிறோம். அது வந்தவுடன்... வந்தவுடன்? வந்தவுடன் அதில் முக்கால்வாசி ஆட்டைபோட்டுவிட்டு, மீதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக்கொடுப்போம். அதுவரையில் பொறுமையை கடைபிடியுங்கள்.


Mani . V
நவ 11, 2025 05:31

அதுனால என்ன? எங்களுக்கு பகலில் டார்ச் லைட் அடித்து, டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்தவர் வீட்டில் தடபுடல் விருந்து உபச்சாரம். அதைச் சிறப்பிக்கச் சென்றோம்.


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 07:00

குறுவை சாகுபடியை அரசு நிறைவேற்றியது் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திருட்டு ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை