உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏஐ மூலம் மக்களை ஏமாற்ற முடியாது: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

ஏஐ மூலம் மக்களை ஏமாற்ற முடியாது: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏஐ உதவியுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்று தமிழக அரசு மீது மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சாலையில் ஆபத்தான முறையில் கிடக்கும் மின்சார கேபிள்கள் பற்றி புகைப்படத்துடன் புகாரளித்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், புகைப்படத்திலுள்ள வாகனங்களை மட்டும் ஏஐ உதவியுடன் அகற்றிவிட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டதாக சென்னை கார்ப்பரேஷன் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.உயிரையே பறிக்கவல்ல மின்சார கேபிள்களைப் பற்றிய தகவல் அறிந்ததும் அதனை அகற்றுவதைவிட்டு புகைப்படங்களை எடிட் செய்வதில் மட்டும் அக்கறை காட்டியிருப்பது மக்கள் நலனில் திமுக அரசு கொண்டுள்ள அலட்சியப்போக்கையே சுட்டிக் காட்டுகிறது. மக்களை ஏமாற்றி உயிருடன் விளையாடுவது தான் திமுக மாடலா?இந்த முறை ஏஐ தொழில்நுட்பம் தவறு செய்ததால் மட்டுமே திமுக அரசின் தவறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதுவரை எத்தனை புகார்கள் களையப்பட்டது போல புனையப்பட்டன? எத்தனை தவறுகள் மறைக்கப்பட்டன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழுகின்றன.ஒருபுறம் பணிகளைத் துறந்து விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் புகாரைச் சரிசெய்வதை விடுத்து, புகைப்படங்களை மட்டும் மாற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம். இது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?எளியோரை எள்ளிநகையாடி, ஏஐ உதவியுடன் ஏமாற்றி, மீண்டுமொரு முறை கோட்டையில் கொடியை ஏற்றலாம் என்ற எண்ணத்துடன் உழன்று வரும் திமுக அரசின் பகல் கனவு கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
ஆக 21, 2025 00:15

ஏஐ உதவியுடன் வாகனங்களை அகற்றியவர்கள் மின்சார கேபிள்களை அகற்றாமல் ஏன் இப்படி மாட்டிக்கொண்டனர்.? திராவிடனுக்கு மூளை அவ்வளவு தானா..?


ரங்ஸ்
ஆக 20, 2025 23:27

வினை விதைத்தவன் தன் வினையறுப்பான். ஒரு முறை ஏமாற்றலாம். பலமுறை ஏமாற்ற நினைத்தால் அவர்களே வினைப்பயனை அனுபவிப்பார்கள். எதன் முலம் வென்றார்களோ அதன் மூலமே தோற்கடிக்கப்படுவார்கள்.


rajesh angarayar
ஆக 20, 2025 20:40

நூதன முறையில் மக்களை ஏமாற்றித்தான் தி மு க ஆட்சி கட்டிலில் ஏறியது இம்முறை நவீன முறையில் அதாவது ஏ ஐ ல்.


M Ramachandran
ஆக 20, 2025 19:55

எமகாதகர்கள். மக்கள் விரோத சக்தி ஆளுகை / ஆளுமை.


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 19:15

4 கோடி நைனா என்ன குரல் உசருது , திருட்டு வோட்டு போட்டு ஒரு ஆட்சியே நடந்து கொண்டு இருக்கு. இப்ப வந்து AI chatgpt gemini deepseek என்று , Ai என்று சொல்லத்தான் உமக்கு தெரியும்.அதற்கு கோடிங் எழுத எங்களுக்கு தெரியும்...


vivek
ஆக 20, 2025 21:19

இவர் எதை பத்தி பேசுறார்


vivek
ஆக 21, 2025 08:15

இது திகழ் ...


Ramesh Sargam
ஆக 20, 2025 19:14

மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று யோசிக்கிறது திருட்டு திமுக அரசு.


SENTHIL NATHAN
ஆக 20, 2025 18:52

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்சையும் விட்டு வைக்காத விடியா அரசூ


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2025 18:38

ஆட்சிக்கு வருவதற்காக பொய் .... ஆட்சியைத் தொடர பொய் ..... ஆனால் பாவமன்னிப்பு கேட்டு கோவில் கோவிலாக மனைவியை அனுப்புவாங்க .....


sree
ஆக 20, 2025 18:35

AI தமிழக விடியல் அரசு


புதிய வீடியோ