உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., விலகல்

அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., விலகல்

சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவதாக, எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுச்செயலர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ., இடம் பெறும் எந்தக் கூட்டணியிலும், எஸ்.டி.பி.ஐ., இடம் பெறாது. இப்போது பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்.அ.தி.மு.க.,வை நிர்ப்பந்தித்து, பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலை என்ன என்பதை அனைவரும் அறிவோம். எஸ்.டி.பி.ஐ., கண்டிப்பாக ஏதாவது கூட்டணியில் இருக்கும். தமிழக மக்கள் பா.ஜ.,வை புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி, திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை