உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்

அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கட்சியின் அனுமதியின்றி டிவி, சமூக ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு நிர்வாகிகள் பேட்டி கொடுக்க கூடாது என அ.தி.மு.க., கூறியுள்ளது.இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்த தகவல்களை கட்சி தலைமை உரிய நேரத்தில் தெரிவிக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s1e5274l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., கட்சி தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள் கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எவ்வித கருத்துகளையும், கட்சி தலைமையின் அனுமதி பெறாமல் டிவிக்கள், சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அதிமுக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஏப் 18, 2025 08:08

உத்தரவு போடவேண்டும் என்றால் பங்காளிகளின் அனுமதி வேண்டும். அதனால்தான் இப்படி ஒரு வேண்டும்கோள். ஆத்தா தீம்க்காவை சுக்கு நூறாக ஒரு சிலர் நேரடியாகவும் ஒரு சிலர் மறைமுகமாகவும் உழைக்கிறார்கள். ஆனால் இதுகள் தீமக்காவை உடைக்க நினைப்பவர்கள் பற்றி கவலையில்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.


Oviya Vijay
ஏப் 17, 2025 23:34

கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லிராதீங்கய்யா... அதுக்குத் தான்... வேற என்ன...


Ramesh Sargam
ஏப் 17, 2025 22:26

கட்சியில் பேட்டி கொடுக்கும் சுதந்திரம் போச்சு. ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லையென்றால் அந்த பொன்முடியை போன்று ஏதாவது பேசி வம்பில் சிக்கிக்கொள்வார்கள், கட்சிக்கும் அவப்பெயர்.


Anbuselvan
ஏப் 17, 2025 21:57

நல்ல உத்தரவு. வரவேற்க தக்கது. கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உளறல்கள் இப்போதைய ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிலிருந்து மட்டும் வரட்டும். அதுவே ஒரு 2% வாக்குகளை கூட்டும்.


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 21:49

இஸ்டத்துக்கு ஆளாளுக்கு கருத்து சொல்ல..இது பிஜெபி அல்ல...எந்த ஒரு தொண்டனும் இப்ப வரை பிஜெபி கட்சி சார்ந்தவர்களை கருத்து பகுதியிலோ வெளியேயோ எதுவுமே பேசாமல் இருக்கான் கூட்டணி பிடிக்குதோ இல்லையோ...


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 17, 2025 21:12

இதுமாதிரி அப்பா கட்சியிலேயும் அனுமதியோடதான் ஆபாசமா பேசணும்னு ஆபாசப் பேச்சுத்துறை அமைச்சருக்கு சொல்லி இருக்கலாம்.


sankaranarayanan
ஏப் 17, 2025 21:00

கட்சி தலைமையின் அனுமதி பெறாமல் டிவிக்கள், சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று பகிரங்கமாகவே அறிவிப்பு வந்துவிட்டது இனி தமிபித்துரை வாயைத்திறக்கவே மாட்டார் முன்பு இப்படித்தான் பி.ஜே.பி. கட்சியை நாங்கள்தான் முதுகில் சுமாந்துகொண்டு செல்கிறோம் என்று கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்.இப்போதும் அவர்போன்ற துரோகிகளுத்தான் இந்த எச்சரிக்கை.தேவையே இல்லாத இவரது வார்த்தைகள் கூட்டணியை பாதிக்கும்