உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க.,: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க.,: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ''பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாக தான் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் மஞ்சள் மாநகரமாக விளங்கும் ஈரோடு, வேளாண் வளர்ச்சியில் தமிழக அளவில் 8வது இடத்தில் உள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dbkuu8ka&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=04 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியுள்ளோம். விவசாயிகளால் தான் உணவு கிடைத்து உடல் நலத்தோடு மக்கள் வாழ்கின்றனர். விவசாயிகளால் தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மைக்கு உழவர் நலத்துறை எனப் பெயரை மாற்றினோம்.தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை எனில் முதல் ஆளாக துணைநிற்பவன் நான் தான். பயிர்களுக்கு இடையே களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட களையாக தான் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கு நீங்கள் போராடினீர்கள் என்று நினைத்து பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகமானது. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும். அதுக்கு உழவர்களை காக்கும் இந்த அரசுக்கு, துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 12, 2025 21:03

அப்படியா ?? நம்பிட்டோம் ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 07:23

யார் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை 1974 இல் புதுப்பிக்காமல் விட்டது யார் கர்நாட அரசின் மீது நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை வாபஸ் வாங்கியது , யார் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கையை ஏவி விட்டது , யார் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள் , யார் மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டார்கள் ..மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை தாக்கியாது .இதற்ககு முதலில் விடை சொல்லுங்கள்


Bhakt
ஜூன் 12, 2025 00:19

இந்த நைனா தொல்லை தாங்க முடியல


Subramanian N
ஜூன் 11, 2025 22:19

தமிழ்நாட்டு மக்களுக்கே துரோகம் செய்கிறது திருட்டு திமுக


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 11, 2025 22:15

விவசாயி பயிர் கடனுக்கு CIBIL SCORE இருக்கனும் என்று கொண்டு வந்த ஒன்றிய அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் விரைவில்


Raj S
ஜூன் 12, 2025 01:28

நாலாவது முறையும் பிஜேபி தான்... கோணவாயன் கும்பலால் ஒரு கூந்தலும் பண்ண முடியாது ஹா ஹா ஹா


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 11, 2025 22:13

அமித்ஷா தான் எங்களை ஜெயிக்க வைக்கப் போகிறார்.. அதிமுக, பாமகவை கபளீகரம் செய்யும் பாஜக.. திமுக பதிலடி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.


guna
ஜூன் 12, 2025 07:25

இந்த இருநூறு ரூபா அண்டா துருவேஷ் கொசுத்தொல்லை


Chandru
ஜூன் 11, 2025 20:16

Mudiyalada saami indha sudalayoda lollu


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:55

திமுக, அதிமுக மாற்றி மாற்றி இப்படி பேசி அவர்கள் சம்பந்தப்பட்ட பல உண்மைகளை அவர்களே வெளிப்படுத்துவார்கள். ஒரு படத்தில் வடிவேலு, கவுண்டமணி-செந்தில் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் இகழ்வாக பேசுவதை, ரெண்டு மாப்பிள்ளைகளும் அவர்களைப்பற்றி எப்படி உண்மையாக பேசுகிறார்கள் என்று பேசுவார். அதுபோல இந்த அதிமுக மற்றும் திமுக.


MARAN
ஜூன் 11, 2025 19:28

விவசாயத்துக்கு ஸ்பெல்லிங தெரியுமா , ஒரு ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு நெல் விதை வேணும்னு தெரியுமா விவசாய நிலத்தில் சிமெண்ட் பாதை போட்டு போட்டோ ஷூட் எடுக்க மட்டுமே தெரியும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 11, 2025 18:44

காவேரியை கர்நாடகாவிற்கு தாரைவார்த்த திமுக தான் இந்த குற்றச்சாட்டை சொல்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை