உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இழிநிலையை மீட்க அ.தி.மு.க., பிரசாரம்

இழிநிலையை மீட்க அ.தி.மு.க., பிரசாரம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., மகளிரணி சார்பில் விளக்கு பூஜை, சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றன. சிறப்பு பூஜையின் போது, தமிழகத்தின் நலனுக்காகவும் கட்சியினர் வேண்டிக் கொள்வர். கூடவே, சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் துவங்கி விட்ட நிலையில், தி.மு.க., ஆட்சியில் இருந்து தமிழகத்தின் இழிநிலையை மீட்க, அ.தி.மு.க,வுக்கு ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை கட்சி சார்பில் பிரசாரமாக எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளோம். அதற்காக வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ளப்படும்.'ஓரணியில் தமிழ்நாடு' என தி.மு.க., மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு மக்களிடம் வரவேற்பில்லை. கூடவே, அக்கட்சியில் புதிதாக யாரும் உறுப்பினராக சேரவில்லை என்பதால், இப்படி எதை எதையோ செய்து வருகின்றனர். - தங்கமணி,முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !