மேலும் செய்திகள்
பொது -- தொலைத்த 5 சவரனை மீட்டு தந்த போலீசார்
22-Aug-2025
சென்னை: விமான பணிப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, அனைத்து உலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் ஜெயச்சந்திரன், விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் மாலை, சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை புறப்பட தயாரானது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, அனைத்து உலக எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், 65, மதுரை செல்ல விமான நிலையம் வந்தார். அவருக்கு வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டு, இருக்கை எண், '19 சி'யில் அமர வைக்கப்பட்டார். அவர் தன் பையை, இருக்கைக்கு மேலே, 'லக்கேஜ்' வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், பணிப் பெண் ஒருவர், ஜெயச்சந்திரனின் பையை வேறு இடத்திற்கு மாற்றினார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து, பணிப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து விமானியிடம் பணிப் பெண்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, 'ஆப்லோடு' முறையில், விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி ஜெயச்சந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர் கீழே இறங்க மறுக்க, இண்டிகோ ஏர்லைன்ஸ் செக்யூரிட்டி ஆபீசர்கள், ஜெயச்சந்திரனை விமானத்தில் இருந்து கீழே இறக்கி, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இரவு 9:00 மணி வரை, போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை விடுவித்தனர்.
22-Aug-2025