உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,முக்கிய நிர்வாகிகள் கவலை: எதிர்காலம் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க.,முக்கிய நிர்வாகிகள் கவலை: எதிர்காலம் குறித்து ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, : சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தலைமை திணறுவதாலும், மூத்த தலைவர்கள் வெளியேறுவதாலும், 'அப்செட்' ஆகியுள்ள அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து யோசிக்க துவங்கி உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆளும் தி.மு.க., தலைமையிலான 10 கட்சிகள் கூட்டணி வலுவாக தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமையோ, அதற்கு இணையான கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால், எட்டு மாதங்களாகியும், வேறு எந்த கட்சியும் இந்தக் கூட்டணியை எட்டிப் பார்க்கவில்லை. மாறாக, கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர், அக்கட்சி உடனான உறவை முறித்துள்ளனர்.

அ.தி.மு.க, தடுமாறுகிறது

பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடனான கூட்டணியை உறுதிப்படுத்த முடியாமல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியும், பா.ஜ., தலைமையும் திணறும் நிலை நீடிக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என பகிரங்க குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனை, கட்சியிலிருந்து பழனிசாமி அதிரடியாக நீக்கினார். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், அக்கட்சியில் இருக்கும் செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர். அரை நுாற்றாண்டாக ஈரோடு மாவட்ட அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர். இதனால், செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணைந்தது, அ.தி.மு.க.,வுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை தக்க வைக்காமல் நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கையால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், 'அப்செட்' ஆகியுள்ளனர். இதனால், 2021ல் பெரும் வெற்றியை தந்த கொங்கு மண்டலத்தில இம்முறை கட்சி தோற்குமோ என்ற அச்சம் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியின் எதிர்காலம் மற்றும் தங்களின் அரசியல் வாழ்வு குறித்து, முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பழனிசாமி மெத்தனம்

கடந்த 2016 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின், அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பின், எந்த தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. எனவே, 2026 சட்டசபை தேர்தல் என்பது, அ.தி.மு.க.,வுக்கு வாழ்வா, சாவா தேர்தலாகும். இத்தேர்தலில் தோற்றால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இதை உணர்ந்து, பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே தென்படவில்லை. பா.ம.க., இரண்டாக பிளவுபட்டு உள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தே.மு.தி.க., விரும்புகிறது. இந்தச் சூழலில், கட்சியையாவது வலிமையாக வைத்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களே, கட்சியிலிருந்து வெளியேற நினைத்த முக்கிய நிர்வாகிகளை சமாதானப்படுத்திய வரலாறு உள்ளது. 1996 முதல் 2001, 2006 முதல் 2011 தி.மு.க., ஆட்சியின் போது, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, ஜெயலலிதா அனைவரையும் அரவணைத்து சென்றார்.

எதிர்காலம் குறித்து அச்சம்

ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதிருப்தியை வெளிப்படுத்தினால், யாராக இருந்தாலும் வெளியேற்றி விடுகிறார் பழனிசாமி. அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், செங்கோட்டையனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என பலரும், கட்சி மாற மனதளவில் தயாராகி விட்டனர்; திரைமறைவில் அதற்கான ஆலோசனையை துவங்கி விட்டனர். இதை உணர்ந்து, கட்சியை தக்க வைக்க பழனிசாமி ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய நிலையில் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே, கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்படும். இல்லையெனில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என விஜய் சொல்வது உண்மையாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Samy Chinnathambi
நவ 28, 2025 06:32

செங்கோட்டையனை நீக்கியபோதே தெரியாதா அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால் வேறு கட்சிக்கு செல்வார் என்று? நீக்கி பல நாட்கள் கழித்து இப்போது திமுகவின் அனுதாபிகள் எல்லாம் அலறுவது வேடிக்கையா இருக்கு.. பா.ஜெ.கவை நம்பி மோசம் போனார் செங்ஸ்.. திராவிட மன்னரால் எதிர் ஓட்டுக்களை பிளக்க களம் இறக்கப்பட்டவர் ஜோசப்பு என்று தெரியாத அப்பாவி அல்ல செங்ஸ் .. தெரிந்து தான் அங்கு போனார்.. அவருக்கு எடப்பாடியை பழி வாங்க வேண்டும்... இன்னும் ரெண்டு பேரு வெளியில சுத்திகிட்டு இருக்காங்க அந்த மாதிரி .. சீக்கிரம் அவங்களும் வருவாங்க.


Saravana
நவ 28, 2025 06:29

எடப்பாடி தன்னை எம்ஜிஆர் ஜெயலலிதா என்று நினைத்து விட்டார் போல Admk சிதறிவிடும்


தேவதாஸ் புனே
நவ 28, 2025 06:25

ஸ்டாலினுடன், பழனிச்சாமி ஏதாவது டீல்.....இருக்குமோ......


Samy Chinnathambi
நவ 28, 2025 06:23

புரிந்து கொண்டு எடப்பாடி அய்யா சாதுர்யமாக செயல்பட வேண்டும். சீக்கிரமாக பா.ம.க , தேமுதிக உடன் கூட்டணியை இறுதி செய்யுங்கள்.


Palanisamy Sekar
நவ 28, 2025 06:03

இன்னும் ஒன்றும் கெட்டுபோய்விடவில்லை. மோடிஜியும் அமீத்ஷாவும் தமிழகம் வந்து அடிக்கடி பிரச்சாரத்தை தொடர்வார்கள் என்றால் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். திமுகவின் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புகின்ற செயல்களை செய்தால் கூட போதுமே திமுகவை ஆட்சியிலிருந்தே அகற்றிவிடலாம். மேலிடமும் கூட இதனை செய்யாமல் தேமேன்னு திமுகவின் ஊழல் பெருச்சாளிகளை விட்டுவைத்திருப்பதுவும் திமுகவுக்கு தெம்பை கொடுத்தது வருகின்றது. பாஜக அரசியல் செய்யாமல் தர்மம் நியாயம் என்று இருந்தால் திமுக போன்ற ஊழல் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று உறுதிபட கூறத்தான் செய்வார்கள். அண்ணாமலை கொடுத்த ஊழல் பட்டியலை தொடர்ந்து அவர்கள் மீது குறைந்தபட்சம் விசாரணை நடத்தினால் கூட போதும் திமுக கப் சிப் என்று கிடக்குக்ம். 888 கோடி நேருவின் ஊழல் அப்படியே கமுக்கப்பட காரணம் என்ன? எடப்படியார் இதுபோன்ற ஊழல்களை எதிர்த்து போராடினார் என்று விரல்விட்டு சொல்லுங்களேன் பாப்போம். கடமைக்கு கோஷம் போட்டுவிட்டு போவார்கள். எம் ஜி யார் காலத்திலும் சரி அம்மாவின் காலத்திலும் சரி திமுகவை வீழ்த்த அவர்களது ஊழல் பட்டியலை வெளியிட்டு போராடியதாகத்தான் வரலாறு உண்டு என்பதை எடப்பாடிக்கு என்ன தெரியும்? தான் என்கிற அகங்காரம் எல்லை மீறிப்போனதால் பாஜகவும் அதற்கு பலியாகிபோனதுதான் மிச்சம். எவ்வளவு பாலியல் புகார்கள்.. ஒரு பந்த் செய்ய வக்கில்லையா இந்த அதிமுக என்கிற பலலட்சம் தொண்டர்கள் உள்ள கட்சிக்கு? யார் முன்னெடுத்து போராடினார்கள் திமுவை எதிர்த்து? யாருமே இல்லை என்பதுதான் சோகமே. அண்ணாமலை மட்டுமே தொடர்ந்து புள்ளிவிவரங்களோடு எதிர்க்கட்சியை விட அதிக ஆக்ரோஷத்தோடு விளக்கமாக எளியோருக்கும் தெரியும் விதமாக பேட்டிகொடுத்து அசத்தினார். கல்லூரி மாணவர்களுக்கு அண்ணாமலை ஹீரோவாகவே தெரிந்தார். அரசியள்ளி ஒதுங்கி நின்ற மேல்மட்ட மக்களுக்கும் அண்ணாமலை மீது ஒரு நம்பிக்கை வந்தது அந்த ஓட்டுக்கள் மீண்டும் ம்யூட் மோடுக்கு சென்றுவிட்டதால் கட்சியின் செல்வாக்கும் ஜொலிக்காமல் இருக்கிறது. நம்பிக்கையோடு வந்த இளைஞர்கள் பட்டாளமும் ஏமாந்து போனார்கள். வேறு வழி இல்லாத இளைஞர்கள் நடிகர் பக்கம் சென்றுகொண்டுள்ளார்கள். எடப்பாடியை ஹீரோவாக கற்பனை செய்துகொண்டது அவர் மீது குற்றமல்ல. அதனை தூண்டி மேல்மட்டத்தில் அண்ணாமலையை ஒதுக்கியத்தைத்தான் மக்களுக்கும் சோர்வை கொடுத்துவிட்டது. திமுகவின் பி டீமின் தலைவர்தான் மிஸ்டர் எடப்பாடி. சந்தேகமே இல்லாமல் உறக்கவே சொல்வேன் உறுதியாக


Palanisamy Sekar
நவ 28, 2025 05:50

காமராஜருக்கு பிறகு சுயநலமில்லாத படித்த பண்பான ஒரு மனிதர் விஷயம் தெரிந்தவராக மேலும் நாட்டுப்பற்று உள்ளவராக ஒருத்தர் ஆண்டவனாக அனுப்பியுள்ளான் என்று மகிழ்ந்த வேளையில் இடிபோல செய்தி வந்தது..அதிமுக கூட்டணிக்காக இடப்படியின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையின் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு வந்தால் கூட்டணி தொடரும் என்கிற கோரிக்கையை ஏற்று அண்ணாமலைக்கு பதிலாக நயினார் அவர்களை நியமித்தார்கள். அப்போதுகூட அண்ணாமலை அவர்கள் தனது நிலையிலிருந்து மாறாமல் சுயகவுரவத்தோடுதான் வெளியே வந்தார். அதன் பிறகு அமீத்ஷா சொன்னதற்காக மனசாட்சிக்கு விரோதமாக இடப்படியின் தலைமையில் பணியாற்றுவோம் என்று கூறினார். காங்கிரஸ் தலைமைதான் இதுபோன்ற செயல்களில் அந்தந்த மாநில தலைமையை சகட்டுமேனிக்கு மாற்றும் என்று கண்டிருந்த நமக்கு அண்ணாமலையை காவுகொடுத்து கூட்டணியை ஏற்படுத்தியது வரலாற்று பிழை என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தேசீயதலைமை உணரக்கூடும். திமுகவின் துரைமுருகன் சொன்னதுபோல அண்ணாமலையின் தலைமையில் இருந்தபோது.. தமிழகத்தில் பாஜக அசுரவேகத்தில் வளர்த்துக்கொண்டு வருகின்றது என்று ஒப்புக்கொண்டு அவரே சொன்ன வார்த்தை இது. அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். கட்சியிலும் சேர்ந்தார்கள். கட்சி மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துகொண்டே வந்தது தனித்தே அடுத்த முறை ஆட்சியை பிடித்துவிடும் என்று பிற கட்சியினரே ஒப்புக்கொண்டார்கள். யார் கண்பட்டதோ யார் தலைமைக்கு புகைபோட்டார்களோ தெரியாது. இப்படி ஒரு சூழலை தலைமை தன்தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டது என்றுதான் சொல்லணும். இப்போது பாஜகவும் இல்லை என்றால் அதிமுக நிலைமை பல தொகுதிகளில் வேட்பாளர்களே இல்லாமல் போகும் அளவுக்கு படுவீக்காக இருக்கும். சூறாவளியக வளர்ந்த கட்சி சூன்யம் பிடித்த மாதிரி தேமேன்னு அந்த இளைஞர்கள் ஓட்டுக்கள் எல்லாம் நடிகர் பின்னே போய்விட்டது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். ஒருசில சுயநல பாஜக பதவி வெறிக்கும்பல்கள் மேலிடத்தில் திமுகவையும் எடப்பாடியையும் ஆஹாஆ ஓஹோ என்று புகைபோட்டதால் வந்த வினை. எப்படி இருந்தாலும் அந்த சுயநல கூட்டமானது பிற்காலத்தில் ஏதோ ஒரு பதவியை வாங்கிக்கொண்டு காங்கிரசைப்போலவே தொண்டர்களை புறக்கணித்துவிட்டு சம்பாதித்துக்கொண்டு போவார்கள். அதிமுக பலவீனமடைய மட்டுமல்ல பாஜகவையும் சவலைப்பிள்ளையாக மாற்றிய பெருமையெல்லாம் எடப்பாடியையே சேரும் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். காலமெல்லாம் ஒன்றிணைந்த அதிமுகவுடன் கூட்டணி என்று மோடிஜியும் அமீத்ஷாவும் அக்கறையோடு அதிமுகவை ஒன்றிணைக்க துடித்ததையெல்லாம் மறந்து சர்வாதிகாரத்தனமாக செயல்படுகின்ற எடப்பாடியை நம்ம்ம்பி அண்ணாமலையையும் சோர்வடைய செய்தது மாபெரும் சதியில் பாஜக தலைமை வீழ்ந்துவிட்டதை உணரலாம். விரைவில்.


Samy Chinnathambi
நவ 28, 2025 06:26

நன்பர்கள் தயவில் வீட்டு வாடகை கட்டுபவர், லண்டன் பயணத்திற்கு பிறகு என்பது கோடிக்கு நிலம் வாங்குகிறார். பால் பாக்டரி வைக்கிறார். சேலத்தில் மற்றொரு தொழிற்சாலையில் பார்ட்னர் என்பது சவுக்கு சொல்லும் செய்தி. காமராசர் போன்று இவர் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்..


Senthoora
நவ 28, 2025 06:33

தமிழனுக்கு மோடிஜியும், அமித்ஷாவும் நல்லது செய்வார்களா என்று இன்னுமா நம்புறீங்க. இலங்கை மக்கள் சுதந்திரம் அடைந்தபோது தமிழ், சிங்களவர்கள் சகோதரங்கள் போல இருப்போம் தமிழனுக்கும், சிங்களவருக்கு நாட்டை பிரிக்கவேண்டாம் என்று சொல்லி தான் சுதந்திரம் வெள்ளையர்களிடம் இருந்து வாங்கினார்கள். ஆனா 11 வது ஆண்டிலே தமிழ் சிங்கள இனவெறி வெடித்தது. இப்பவே வடமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் அராஜகம் பண்ணுறாங்க,


Palanisamy Sekar
நவ 28, 2025 05:34

செங்கோட்டையன் என்ன சொன்னார் அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைவரையும் கட்சிக்குள் மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நானும் தங்கமணி வேலுமணி சி வி ஷண்முகம் உட்பட ஐந்துபேரும் துப்படியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றுதானே கூறினார்? அதனை பிறர் யாரும் மறுக்கவும் இல்லை. அப்படிப்பட்ட அந்த இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரேனும் செங்கோட்டையனை கட்சியிலிருந்து விலக்க முற்படும்போது ஏன் தடுக்க மறுத்தனர். தங்களோடு இணைந்துதானே இதற்கு முன்னர் அமைச்சரவையில் பணியாற்றினார் செங்கோட்டையன் , அவர் என்ன நேற்றா கட்சியில் இணைந்தார்? சீனியர்கள் என்கிற முறையில் எடப்பாடியிடம் எடுத்து சொல்லி இருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? காரணம் கட்சியை விட கட்சியில் சொத்துக்கள் மீதுதான் இவர்களுக்கு கவனமெல்லாம் என்று எடுத்துக்கொள்ளலாமா? எடப்பாடியின் போக்கை ஆரம்பநிலையிலேயே கண்டித்திருந்தால் இப்படி சீனியர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விரட்டலாமா? சசிகலா காலில் விழும்போது போகாத சுயமரியாதையும் தன்மானமும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு சேர்ந்து குருபூஜைக்கு சென்றதை காரணம் காட்டி நீக்கியதை எப்படி பிற இரண்டாம் கட்சி தலைவர்கள் தேமேன்னு இருந்தார்கள். இப்போது கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது. என்னமோ தமிழகமே எடப்பாடியிடம் ஆட்சியை உடனே தூக்கி கொடுத்துவிடப்பவது போல அப்படி ஒரு பந்தா காட்டினார் எடப்பாடி. அமீத்ஷா அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று பேட்டியில் கூறியதற்கு உடனே ஹ்ம்ம் கூட்டணி ஆட்சியல்லாம் கிடையாது. எனது தலைமையில் அதிமுக ஆட்சிதான் நடக்கும் என்று தலைக்கனத்தோடு பதில் கூறினார். இப்போது இருப்பது அதிமுகவின் ஒரு சிறிய குழு என்றுதான் கூறவேண்டும். பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள் சிலர் இவரது போக்கினை கண்டு வெம்பி வெளியேறினார்கள். இன்னும் சொல்லப்போனால் ஜெயகுமார் போன்றவர்கள் கூறினார்கள் எனது தொகுதியில் மட்டும் 20,000 இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள் அவர்களை பகைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்கிறார். அதன் தாக்கத்தில்தான் மௌனமாக இருக்கின்றார் இப்படி சிலர் வெளியேறுவார்கள். ஜெயக்குமார் போன்றோர் சொல்லப்போனால் கட்சிக்கு பாரம் தான். செங்கோட்டையனை போல தொடர்ந்து வெற்றிகண்டதே இல்லை. ஒரே ஒரு தொகுதியை கூட தக்கவைக்க தெரியாத ஜெயக்குமார் போன்றோர் தனது மகனுக்காக கட்சியில் என்ன நடந்தாலும் அடஜஸ்ட் செய்துகொண்டு போகும் சுயநலப்புலிகளை வைத்துக்கொண்டு இந்த எடப்பாடி முதல்வர் கனா காண்கின்றார். இடப்படியின் போக்குதான் அதிமுகவின் வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம். என்போன்ற பல அம்மாவின் தொண்டர்கள் மனம் வெதும்பியே கட்சியை விட்டு விலகி பாஜகவின் மோடிஜிக்கு பணியாற்றுகின்றோம். என்னைப்போல எந்த எதிர்பார்ப்புமில்லாத அதிமுக தொண்டர்கள் அம்மாவுக்காக திமுகவை கடுமையாக எதிர்த்து பணியாற்றினோம். எங்கள் கண்முன்னே அம்மாவின் கட்சி கரைந்துபோவதை காணும்போது எடப்பாடி மீது வருகின்ற கோபம் எரிமலையாகத்தான் இருக்கிறது. இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.. வெறுப்பில் போதும் என்று விலகி நிற்கின்றோம். பாஜவுக்காக இனி தொடர்ந்து என்போன்றோரின் பணி தேசப்பற்றின் அடிப்படையில் தொடரும்.


ramani
நவ 28, 2025 04:55

இம்முறையும் அதிமுக தோற்றால் அதற்கு காரணம் இடைப்பாடி பழனிச்சாமி மட்டுமே. அவரது தான்தோன்றிதனமான நடவடிக்கைகள் அதிமுகவை அழிவு பாதைக்கு இட்டு செல்கிறது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரட்சி செய்து இடைப்பாடி பழனிச்சாமியை வெளியேற்ற வேண்டும். இது ஒன்றே அதிமுகவை காப்பாற்ற வழி


Oviya Vijay
நவ 28, 2025 04:34

நான் பலமுறைத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்... பழனிச்சாமிக்கு இருப்பது செல்வாக்கா இல்லை அவர் ஒரு செல்லாக்காசா என்பதை 2026 தமிழக தேர்தல் முடிவுகள் வந்தபின் இவ்வுலகம் அறியப் போகிறது... இவருக்கா இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம் என கூட்டணித் தலைவர்களும், உட்கட்சி நிர்வாகிகளும் தங்களையே அசிங்கமாகப் பார்த்துக் கொள்வர்... தேர்தல் முடிவுகள் வரும் நாளில் அதிமுக தலைமைக் கழகத்தில் மிகப்பெரிய களேபரம் ஏற்படப் போகிறது... எடப்பாடி அங்கிருந்து விரட்டப்படவும் வாய்ப்பிருக்கிறது... எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக் காத்த கோட்டையைத் தங்களின் சுயநலத்திற்காக தகர்த்தெறிய முற்படுகின்றனர் என்றால் நெடுங்கால அதிமுக தொண்டர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அந்த பொறுமை 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் அதிமுக தொண்டர்களிடத்தில் பீறிட்டு எழப் போகிறது... தான் போட்ட ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போய் விட்டதே என எடப்பாடி புலம்பப் போகும் திருநாள் 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகும் நன்னாள்... 2026 தேர்தலில் திமுக அடையப்போகும் வெற்றிக்கு மீடியாக்கள் கொடுக்கப் போகும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் அதிமுக அடையப் போகும் வீழ்ச்சிக்கு கொடுக்கப் போகும் முக்கியத்துவமே அதிகம்... மாநில மீடியாக்கள் முதல் தேசிய மீடியாக்கள் வரை அனைத்திலும் சல்லி சல்லியாக சிதறப் போகும் அதிமுகவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இனி ஒருபோதும் அதிமுக மீண்டு எழ வாய்ப்பேயில்லை... தோல்வி உறுதி என்று அறிந்த நிலையில் இனி ஒரு கட்சியும் இவர்களை சீண்ட விரும்ப மாட்டார்கள். அவர்களின் மெகாக் கூட்டணிக் கனவு எல்லாம் இனி நிறைவேறாது... 2026 தேர்தலோடு அதிமுகவை தமிழக மக்கள் சங்கு ஊதி புதைத்து பால் ஊற்றி காரியம் செய்து விடுவர்... ஆனால் இதனை நம்பி வந்த பாஜகவின் நிலை... ஐயகோ... இதில் வேறு இவர்கள் கூறிக்கொள்வது என்னவென்றால்... பீகாரைப் போல் இங்கேயும் வெல்வோம் என்று... வாய்ப்பில்லை ராசா...


Kasimani Baskaran
நவ 28, 2025 04:04

பங்காளிகளுக்காக கூட்டணியை கலைத்துவிட்டு எசப்பாடி தீம்க்காவில் ஐக்கியமாக மாட்டார் என்று நிச்சயமாக சொல்ல முடியாது..


முக்கிய வீடியோ