உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பெண்களுக்கு பாதுகாப்பில்லை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக பெண்களுக்கு பாதுகாப்பில்லை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: 'பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 14ம் தேதி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் தலைமையிலான, தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் நடமாட்டம், கடத்தல், போதையில் இளைஞர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் சட்டம் -- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. கோவையில் கல்லுாரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம், போலீஸ்காரர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்தது என, தமிழக வரலாற்றில், தி.மு.க., ஆட்சி காலம் ஒரு கரும்புள்ளி என்பதை, இது போன்ற நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. வரிகளை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. இதற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 14ம் தேதி, காலை 10:00 மணிக்கு, திண்டிவனம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 12, 2025 11:08

நான் பலமுறை கூறியதுபோல தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பில்லை என்று கூறமுடியாது. தமிழகத்தில் ஆண்களுக்கும், அரவாணிகளுக்கும், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் என்று யாருக்குமே பாதுகாப்பில்லை. ஏன் தமிழக முதல்வருக்கே கூட பாதுகாப்பில்லை. அப்படி இருந்திருந்தால் ஏன் அவர் வெளியே செல்லும்போதெல்லாம் அவர் வாகனத்தின் முன்னும் பின்னும் அத்தனை பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள். அது போதாதென்று black cat commandos வேறு. அதுவும் அத்தனை பாதுகாப்புடன் பகலில் மட்டும்தான் அவர் வெளியே வருவார். இரவில் அதிகம் வருவதில்லை. அந்த அளவுக்கு அவருக்கே பயம்.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 09:25

தமிழகத்தில் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை அதிமுகவினரே விருதுநகரில் கோவிலில் இருந்த இரு ஆண்களை கொன்று கொள்ளையடித்து சென்றதை மறந்து விட்டீரோ ?


புதிய வீடியோ