மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம் அ.தி.மு.க., உதவி
சென்னை:'மறைமலை அடிகளார் பேத்தி குடும்பத்துக்கு, அ.தி.மு.க., சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மறைமலை அடிகளார் பேத்தி லலிதா, தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டு வாடகை கொடுப்பதற்குக்கூட போதிய வருமானம் இல்லாமல், மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில், ஒரு லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.