உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு

மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு

சேலம்: 'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qt092nwp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலத்தில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கலந்து கொள்ளும். அ.தி.மு.க., சார்பில் இருவர் பங்கேற்று கருத்துக்களை அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிப்போம். கூட்டத்தை அதற்கு தான் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அங்க தான் பேச முடியும். கூட்டத்தில் எங்களது நிலைப்பாடை தெளிவாக எடுத்துரைப்போம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.,தான். வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. மக்கள் கொடுத்த அங்கீகாரம் அ.தி.மு.க.,வுக்கு தான். பிரதான எதிர்க்கட்சி தான் மக்களின் பிரச்னையை எடுத்து சொல்லும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

ஸ்டாலினின் மன்னராட்சி!

அவரது அறிக்கை: தி.மு.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதன் எடுத்துக்காட்டு தான் இது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் தி.மு.க., அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், போலீசார் ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது. கலெக்டரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Suresh sridharan
மார் 01, 2025 09:26

வரும் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டாக??? தேர்தலில்?????


பேசும் தமிழன்
பிப் 28, 2025 19:05

எதற்க்காக தனியாக பெயருக்கு கட்சி நடத்தி கொண்டு மக்களை ???.... பேசாமல் தாய்க் கட்சி திமுகவில் சேர்ந்து விடலாமே ??


பேசும் தமிழன்
பிப் 28, 2025 19:03

பங்காளி கட்சி கூட்டும் கூட்டத்தில்..... பங்கேற்காமல் இருந்தால் எப்படி ???.... பங்கேற்கவில்லை என்றால் தான் அதிசயம்.


sankaranarayanan
பிப் 28, 2025 18:28

கோட நாட்டு வழக்கில் திடீரென கைது செய்வார்களோ என்ற அச்சத்தில்தான் இ.பி.எஸ். இந்த அழைப்பை ஏற்று மார்ச் 5-ஆம் தேதியில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் எதிர் கட்சியே இல்லாமல் நடக்கும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான் கொடுத்து வைத்தவர்கள் பழனிசாமி எதிர் கட்சியில் சும்மா பெயருக்காகவே உள்ளார் வாய் பூட்டு போட்டாகாவிட்டது அதிகம் பேசினான் இருக்கவே இருக்கு சிறை தண்டனை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது தன்னந்தந்தனியே நின்று போராடி வீழ்ந்து போகப்போகிறார்


Venkateswaran Rajaram
பிப் 28, 2025 18:11

இரண்டும் கூட்டுக்களவாணி திருட்டு திராவிடர்கள்


Saai Sundharamurthy AVK
பிப் 28, 2025 16:25

இவரும் ஒரு கிணற்றுத் தவளை தான்.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 16:01

சமோசா, பஜ்ஜி போண்டாவை மிஸ் பண்ணாக்கூடாதே


ஆரூர் ரங்
பிப் 28, 2025 16:00

35 ஆண்டுகளாக தொகுதி சீரமைப்பை தள்ளிப் போடப்பட்டுள்ளதை கோர்ட் ஏற்காது .பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கோர்ட்டுக்கு சென்றால் மத்திய அரசாலும் மேலும் தள்ளிப் போட முடியாது. வெற்றுக் கூச்சல்


Kasimani Baskaran
பிப் 28, 2025 15:41

மிரட்டுகிறார்கள் என்று சொல்பவர் தீம்க்கா அரசை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி உள்துறைக்கும், ஜனாதிபதிக்கும் மனுக்கொடுக்கலாமே - நீதிமன்றம் கூட செல்லலாம். அது எதையுமே செய்யாமல் தீம்க்காவுக்கு ஆமாம் சாமி போடுவது எப்படி சரியாகும் ?


enkeyem
பிப் 28, 2025 15:16

இதுக்கு அதிமுக வை திமுக வில் இணைத்துக்கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை