மதுரையில் 10 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்; செல்லுார் ராஜூ பேச்சு
மதுரை : மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 71ம் பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் மதுரையில் பத்து தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் இனிக்கும். ஆனால் அ.தி.மு.க., வைத்தால் கசக்குது. முதல்வர் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை கண்டு பயப்படுகிறார். தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. நாங்கள் என்றும் திராவிட இயக்கத்தில் தான் இருக்கிறோம். 17 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க., கூட்டணியில் இருக்கும் போதெல்லாம் மாநில சுயாட்சி, மும்மொழி கொள்கை, கல்வி கொள்கை எங்கே போனது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. இவ்வாறு பேசினார்.