50 லட்சம் பயணியருக்கு கட்டண சலுகை;ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
சென்னை : சுதந்திர தினத்தையொட்டி, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், 50 லட்சம் பயணியருக்கு, விமான பயண கட்டணத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 15ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும், 50 லட்சம் பயணியருக்கு, கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். உள்நாட்டு விமான பயண கட்டணம் 1,279 ரூபாயிலும், சர்வதேச விமான பயண கட்டணம் 4,279 ரூபாயிலும் துவங்குகிறது. பயணியர் இந்த கட்டணச் சலுகையை பயன்படுத்தி, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலும் டிக்கெட் புக்கிங் செய்து, சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கலாம். தள்ளுபடி கட்டண விமான டிக்கெட்டுகளை, www.airindiaexpress.comஎன்ற இணைய தளத்திலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம். 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' செயலியில் நேற்று முதலும், டிக்கெட் கவுன்டர்கள், ஏஜென்சிகள் வாயிலாக இன்று முதல் 15ம் தேதி வரையும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.