உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டண சலுகை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

கட்டண சலுகை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

சென்னை: உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணியருக்கு, விமான கட்டண சலுகையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், 'பேடே ஸ்கேல்' என்ற திட்டத்தின் கீழ், பயணியருக்கு விமான கட்டண சலுகையை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணியர், டிக்கெட் கட்டணத்தில் சலுகை பெறலாம். அதன்படி, தற்போது 'எக்ஸ்பிரஸ் லைட்' திட்டம் 1,299 ரூபாயிலும், 'எக்ஸ்பிரஸ் வேல்யூ' திட்டம் 1,349 ரூபாயிலும் துவங்குகிறது. இதில், உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாது. உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டுமே, இது பொருந்தும். இதே போல சர்வதேச நாடு களுக்கு 4,876 ரூபாயில் இருந்து பயணிக்க முடியும். இது, செப்., 1ம் தேதி வரை இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை airindiaexpress.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை