உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்குமார்

துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்குமார்

சென்னை: சமீபத்தில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, துபாய் 24எச் கார் ரேஸில் இருந்து நடிகர் அஜித்குமார் விலகி உள்ளார்.இது தொடர்பாக அவரது அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துபாய் 24 எச் தொடருக்கான பயிற்சியின் போது அஜித்குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரேஸ் வடிவம் மிகவும் கடினமானது. மேலும், நீண்ட சீசனுக்கு முன்னாள் இருக்கும் சவால்களை அணி கருத்தில் கொண்டது. அணியின் உரிமையாளர் மற்றும் அதன் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில், அஜித் குமாரின் நலன் மற்றும் அணிகளின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முன்னுரிமையாக உள்ளன. விரிவான ஆலோசனைக்கு பிறகு, தங்கள் உத்தி மறுபரிசீலனை செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sq9w9pw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிகவும் தீவிரமான ஆலோசனைக்கு பிறகு, துபாய் 24 எச் ரேஸில் இருந்து அஜித்குமார் விலகுவது என்ற கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அவரின் தனிப்பட்ட லட்சியங்களை தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்து, இன்று நடக்கவிருக்கும் தொடரின் இரண்டு ரோல்களில் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். போர்ஸ்ச்சே 992 கப் கார் ரேஸில் அஜித்குமார் அணியின் உரிமையாளராகவும், போர்ஸ்சே கேமன் ஜிடி4 ரேஸில்ஓட்டுநராகவும் பங்கேற்க உள்ளார். இரண்டு கார்களுக்கும் உங்களுடைய ஆதரவை கொடுங்கள் எனக்கூறப்பட்டு உள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகள் நடக்கிறது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக, அஜித் குமார் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்த அஜித் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Krishnamurthy Venkatesan
ஜன 11, 2025 23:37

எங்கள் ஊரின் ஒரு கபடிக்குழுவின் கொள்கை என்னவெனில் "விழுப்புண் படாத நாட்களெல்லாம் ஒரு வீரனுக்கு வீணான நாட்களே" என்பது ஆகும். எனவே அஜித் அவர்கள் "கருமமே கண்ணாயினார்" என்ற மூதுரைப்படி தமது லட்சியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


Senthil Kumar
ஜன 11, 2025 21:58

இந்த ரேஸ் ரொம்ப கடினமானது அஜித்தால் முடியாது , இதற்கு மிக நீண்ட பயிற்சி தேவை அதனால் , நீங்கள் விலகிக்கொல்வது நல்லது.


Seekayyes
ஜன 11, 2025 21:29

அடடடா,பயந்துட்டாப்பல நம்ம தல, எல்லாம் சினிமா ஆயிடுமா தல. எப்பவும் போல மத்த தமிழ் சினிமா கூத்தாடிகள போல வெத்து சீனு.


magesh
ஜன 13, 2025 10:32

.............


M Ramachandran
ஜன 11, 2025 20:46

அட்ட கத்தி ஹீரோவிற்கு மத்தியில் நிஜமான தைரியமான கொள்கை பிடிப்புள்ள ஹீரா


நசி
ஜன 11, 2025 20:27

ஹீரோ‌னா‌ எம்ஜிஆர் மட்டுமே...


Padmasridharan
ஜன 11, 2025 19:28

tAke rest? சென்னை தமிழ்நாட்டில் நினைத்தது ஒன்று துபாயில் நடப்பது ஒன்று. Health&Safety always the 1st priority in racing


DUBAI- Kovai Kalyana Raman
ஜன 11, 2025 19:19

இதுக்குத்தான் இவ்ளோ build up ஆ


Agni Kunju
ஜன 11, 2025 18:53

சீ சீ இந்த பழம் புளிக்குதா? இல்லை.. ஆடத்தெரியாததால ரோடு குறுகலா? இல்லை… இருக்கிறத விட்டுட்டு பறக்கிறத பிடிக்கிறதா?


புதிய வீடியோ