வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கனிமொழி பிஜேபி புரிதலுக்கு பயந்து இந்த திடீர் கூட்டணி ..
மதுரை : தி.மு.க.,வில் இருந்து தன்னுடன் சேர்ந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களை மீண்டும் சேர்க்க கோரி 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை வீட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், அழகிரி வேண்டுகோள் வைத்ததாக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமாதானம்
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டனர். கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்த அழகிரி, தமிழகம் முழுதும் உள்ள அவரது ஆதரவாளர்களை சந்தித்தார்.தனிக்கட்சி துவக்க ஆலோசித்தார். ஆனால், தேர்தலை சந்தித்து ஸ்டாலின் வெற்றி பெற்ற பின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் சமாதானம் ஆன அழகிரி, அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.அழகிரி மகன் தயாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நலம் விசாரிக்க சென்றது முதல் அழகிரிக்கும் - ஸ்டாலினுக்கும் இடையே சுமூக உறவு ஏற்பட்டது. அழைப்பு
இதற்கிடையே, கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினும், அழகிரி வீட்டிற்கு சென்றார். அவர்கள் சந்திப்பு அரை மணிநேரத்திற்கும் மேல் நீடித்தது. அப்போது அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஸ்டாலினுடன் சந்திக்க அழகிரி ஏற்பாடு செய்திருந்தார்.இதன்படி ஸ்டாலின் - அழகிரியுடன் அவர்கள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். இதன்பின் நீக்கப்பட்டவர்கள் விரைவில் கட்சியில் சேர்க்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. மனம் விட்டு பேச்சு
அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:
இந்த சந்திப்பில் எங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி, ஒருமுறை அழகிரியை சந்திக்க வந்தபோதே, இது குறித்து அழகிரி பேசியிருந்தார். அதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அளித்தனர். அதில், கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதி அளித்திருந்தனர். தற்போது, மதுரைக்கு வந்த ஸ்டாலின், அழகிரியிடம் மனம் விட்டு பேசியுள்ளார்.கட்சியின் பொதுக்குழு முடிந்த நிலையில், விரைவில் எங்களை இணைத்து அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கனிமொழி பிஜேபி புரிதலுக்கு பயந்து இந்த திடீர் கூட்டணி ..