உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு

10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு

சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட, 10 மசோதாக்கள் மீது, நீண்ட நாட்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு, பிறகு அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்த கவர்னர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. '10 மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டது சட்டப்படி தவறு' என, உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டமான மசோதாக்கள் என்ன?

1. தமிழ்நாடு மீன்வள பல்கலை மசோதா2. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மசோதா3. பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதா4. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை மசோதா5. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மசோதா6. தமிழ்நாடு வேளாண் பல்கலை சட்டத்திருத்த மசோதா7. தமிழ்நாடு பல்கலை சட்டத்திருத்த (2வது) மசோதா8. தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா9. தமிழ்நாடு மீன்வள பல்கலை மசோதா10. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மசோதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankar
ஏப் 13, 2025 10:25

செல்லாது என அதே கோர்ட் நாளை சொல்லும்


N Sasikumar Yadhav
ஏப் 12, 2025 20:49

திருட்டு திமுக நிர்வாகி சொன்ன கோட்டாவில் வந்தவர்கள் அனைத்து இடங்களிலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் அதனால்தான் திராவிட மாடலுக்கு ஆதரவாக தீர்வுகள் வருகிறது


Venkataraman
ஏப் 12, 2025 20:46

இந்த அரசு அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகாது. பொதுவாக ஆளுநர்தான் அரசின் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதே போல மத்திய அரசின் அறிவிப்புகள் ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலோடு வெளியாகும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர்தான் மாநிலத்தின் முதல் அரசு அதிகாரி ஆவார். அவர்தான் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும் நியமிக்கிறார். எனவே அவருடைய கையொப்பம் இல்லாத எந்த அரசு அறிவிப்பும் செல்லாது. இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் வேந்தராக உள்ள பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். யுஜிசி, பல்கலைக்கழகங் களுக்கு தரும் நிதி உதவி நிறுத்தப் படலாம். எப்படியும் தனியார் பல்கலைக்கழகங்களும், சென்னைப் பல்கலைக் கழகமும், லயோலா, கிறிஸ்டியன், பிரசிடென்சி கல்லூரி போன்ற நிகர்நிலை, சுயநிதி பல்கலைக்கழங்களும் இந்த அரசு அறிவிப்பின் கீழ் வராது.


GMM
ஏப் 12, 2025 16:22

அதாரிட்டி என்பது கவர்னர். செயலர் on behalf of governor of tamil nadu state - என்பதை கவர்னர் ஒப்புதல் இருந்தால் மட்டும் தான் அரசாணை நகல் வெளியிட முடியும். நீதிமன்றம் உத்தரவு கொண்டு என்றால் நீதிமன்றம் உத்தரவு எண், நாள் மற்றும் நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அரசாணை என்று வெளியிட வேண்டும். இந்த உத்தரவு கொண்டு துணை வேந்தர் நியமிக்க முடியாது. மானியம் விடுவிக்க மானிய குழுவிற்கு அதிகாரம் இல்லை. முதல்வர் வேந்தர் நியமித்து, சம்பளம் வழங்கி பட்டம் தமிழகத்தில் மட்டும் செல்லும்படி செய்யலாம்.


maan
ஏப் 12, 2025 15:40

தமிழ்நாடு எதை வேண்டுமானாலும் சட்டமாக்கலாம். ஆனால் யூஜிஸி, உச்சநீதிமன்ற வேறு ஒரு தீர்ப்பின்படி, கவர்னர் வேந்தராக இல்லாததனால் பணம் தராது.


Dharmavaan
ஏப் 12, 2025 15:22

மோடி/ஆளுநர் மேல்முறையீடு செய்யவேண்டும் இந்த வெளியீடு செல்லாததாகிவிடும்


Balasubramanyan
ஏப் 12, 2025 15:08

Hayward educated CM is chancellor of the university. Third grade persons wil be pro chancellors.and not qualified teaching or MLAs or MPs orr govt sporting persons will be the vie chancellors. Here after universities in tamilnadu will be in top in world renowned universities. Stanford,Harvard, MIT in Amelia Oxford in UK will be closed and students from these countries will demonstrate that they want to study only in TamilNadu universities. Honey will flow . Good.Another law. The state govt will have its own IAS,IPS officials and no competitive examinations. All laws will be implemented with the approval CM and not required approval from President. No files will be sent to governor. Uture is very bright.


Thetamilan
ஏப் 12, 2025 13:47

ரவியோ மோடியோ ஜனாதிபதியே இனியும் ராஜினாமா செய்யாதது ஏன்


Rajathi Rajan
ஏப் 12, 2025 11:46

ஆமா ஆர் ஆர் எஸ் ரவி என்ன ஆனார்? ஒரு பேட்டியும்> போட்டோவையும் கூட காணோம், இப்ப பார்க்கணுமே அந்த முகத்தை....


M S RAGHUNATHAN
ஏப் 12, 2025 11:21

மாநில அரசு எந்த அரசாணை வெளியிட வேண்டும் என்றாலும் ஆளுநர் பெயரில் தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது செல்லாது. அவசர சட்டமோ அல்லது அரசாணையோ ஆளுநர் பெயரில் தான் வெளி இட வேண்டும் இந்த அரசாணை ஆளுநர் பெயரில் இல்லை.


mohanamurugan
ஏப் 12, 2025 15:13

இந்த ஆணை ஆளுநரால் கையொப்பமிடப்பட்டதாக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டு By order of governor என்பதாகத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது.


புதிய வீடியோ