உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை சுளீர்

தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: ''தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் வேதனையானவை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியா--பாகிஸ்தான் பிரச்னை நீண்டகாலமாகஇருந்து வருகிறது. தொடர்ந்து அத்துமீறி வரும் பாக்., மீது அறத்தின் அடிப்படையில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன்களை நம் நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர்.பாக்., தீவிரவாதிகள் செய்த தவறுக்கு, அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம். ஆனால், பாக்., நம் நாட்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காகவும் சண்டை போடவில்லை.நம் நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம். நம் நாட்டின் நடவடிக்கையை பார்த்த பின், ஓர் உயிரை எடுப்பதற்கு பாக்., பயப்பட வேண்டும்.இந்திய ராணுவ வீரர்களுக்காக, முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் முழு ஒத்துழைப்பை, அவர் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடத்திய நான்கு ஆண்டுகளும் வேதனையானவை. பொருளாதாரத்தில் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

என்றும் இந்தியன்
மே 11, 2025 18:19

வேதனையானவை என்றால் என்ன???யாருக்கு வேதனை???அறிவற்ற கட்சியை பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினால் என்ன நடக்கும் என்று வெட்ட வெளிச்சமாக காண்பித்துக்கொடுத்தது இந்த திமுக ஆட்சி என்று சொல்லுங்கள்


Kasimani Baskaran
மே 11, 2025 18:08

அடிமைத்தனத்தில் ஊறிப்போன உடன் பிறப்புக்களுக்கும் முவெ கூட்டத்துக்கும் நேர்மையான ஒருவனை பார்த்தால் சுத்தமாக பிடிக்காது.


abdulrahim
மே 11, 2025 14:31

பியூஸ் போன பல்பு ....


venugopal s
மே 11, 2025 14:20

ஏதாவது பதவி பார்த்து போட்டுக் கொடுங்கப்பா!


Raja k
மே 11, 2025 13:21

ஆமா நீங்க ரொம்ப வேதனை பட்டிங்க


Kanniyappan.k Kannankanni
மே 11, 2025 11:49

உங்கள் கூட்டணி நண்பர்கள் ஆட்சி என்ன பொற்காலமா


ramesh
மே 11, 2025 11:12

பொருளாதாரத்தில் தமிழ் நாடு பின்னோக்கி செல்லுகிறதா


Sangi Saniyan
மே 11, 2025 11:08

உளறல்... குமுறல்


ramesh
மே 11, 2025 11:02

நாட்டு மக்களுக்கு தங்கள் 11 ஆண்டு ஆட்சி காலமே வேதனை தான் அண்ணாமலை.


மூர்க்கன்
மே 11, 2025 13:13

உருப்படாத அண்ணாமலை.


Kasimani Baskaran
மே 11, 2025 10:55

திராவிடமயமாக்கப்பட்ட பாஜகவால் தாத்தா தீம்க்காவுக்குத்தான் நல்லது. ஆதீம்க்காவினர் என்று தீம்க்கா விசுவாசிகளே. ஆகவே இவர்களுடன் கூட்டணி என்பது தற்கொலைக்குத்தான் சமம். சிறிது சிறிதாக கட்சியை வளர்க்கவில்லை என்றால் பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும். அரசியல் கட்சி என்பது மக்களுக்காக என்பதை புரிந்துகொள்ள முடியாத திராவிடம் சிறிது சிறிதாக வாரிசுகளால் வீழும்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 11:55

முன் கை நீண்டாதான் முழங்கை நீளும்.


சமீபத்திய செய்தி