உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 9ல் அகில இந்திய வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ பங்கேற்பு

ஜூலை 9ல் அகில இந்திய வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ பங்கேற்பு

மதுரை : மத்திய அரசின் தனியார் மயம், புதிய ஓய்வூதிய திட்டம், தேசிய கல்விக் கொள்கைகளுக்கு எதிராக ஜூலை 9 ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ பங்கேற்பதாக அறிவித்துள்ளது.மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது:ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹிமாச்சலபிரதேச மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியபோது, பி.எப்.ஆர், டி.ஏ., நிதியத்தில் செலுத்திய நிதியை தர மத்திய அரசு மறுத்துவிட்டது. ராஜஸ்தான் பழைய திட்டத்தை ஆய்வு என்ற முறையில் ரத்து செய்ய முயற்சிக்கிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பெற பி.எப்.ஆர்.டி.ஏ., ஆணையத்தை ரத்து செய்வதே வழி.பல மாநிலங்களில் 12 மணி நேர வேலை நிறுத்தம் அமல்படுத்த காரணம், மத்திய அரசின் தாராளமயம், தனியார் மயமே. இதற்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 20 கோடி பேர் பங்கேற்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் ஜூலை 9ல் நடக்கிறது. மே 19ல் நடந்த ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுப்படி இதில் ஜாக்டோ ஜியோவும் பங்கேற்கிறது.இந்தியன் ரயில்வே, சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம் உட்பட முக்கிய துறைகளை தனியார்மயமாக்கக் கூடாது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை விலைக்குறியீடு, வழக்கமான திருத்தத்துடன் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசின் காலியிடங்களை நிரப்புதல், காலாவதி இடங்களை புதுப்பிப்பதற்காக இப்போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூன் 25, 2025 07:21

மத்திய மாநில அரசுகளின் ஊழியர்கள் லஞ்சம் இன்றி சேவை செய்வதில்லை. அரசமைப்பு மற்றும் சட்டங்கள் படியும் செயலாற்றுவதில்லை.இவர்கள் மக்களை உயிருடன் கொல்லுபவர்களாகவும, பொய்யுரைப்பவர்களாகவும் மத்திய மாநில அரசுகளின் திரள் நித்தியங்களை சூறையாடுபவர்களாகவும்/லஞ்சம் கொடுப்பவர்களை சூறையாடச் செய்பவர்களாகவும் உள்ளனர்.இப்படி பட்ட குற்றவாளிகள் ஒன்று திரண்டு அரசாங்கங்களை அவ்வப் போது மிரட்டிக் கொண்டுள்ளனர் சொகுசு வாழ்க்கை வாழ.


புதிய வீடியோ