உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து கட்சி கூட்ட நாடகத்தால் பலனில்லை

அனைத்து கட்சி கூட்ட நாடகத்தால் பலனில்லை

மூன்றாவது முறையாக, இந்தியாவை பா.ஜ., ஆளுகிறது. இத்தனை ஆண்டுகளாக , வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து கொண்டு இருக்கிறது. அப்போதேல்லாம் சீர்திருத்தம் செய்யாமல், இப்போது, எஸ்.ஐ.ஆர்., முறையை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தமிழகம், கேரளா போன்ற பா.ஜ.,விற்கு அதிகாரம் இல்லாத மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே, நாங்கள் புகார் அளித்தபோது, தேர்தல் கமிஷன் காதிலேயே வாங்கவில்லை. தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதால் ஒரு பயனுமில்லை. அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தால், எந்த பலனும் கிடையாது. தமிழகத்தில் இருக்கும் வட இந்தியர் எண்ணிக்கையும், ஓட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கையும் அரசிடம் உள்ளதா? தமிழகத்தில், தமிழால் யாரும் ஒற்றுமையாக இல்லை; வட மாநிலத்தவர், ஹிந்தி என்ற மொழியால் ஒற்றுமையாகி விடுவர். எனவேதான், அவர்களை நான் எதிர்க்கிறேன். -- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

panneer selvam
நவ 03, 2025 18:05

Seeman ji what is your message . SIR was conducted in Bihar as per Supreme court guidelines and now election is on . Now Bihar who are ruling parties ? In Pondicherry who are ruling parties where SIR is going on . If you do not trust Election Commission , then do not con the election . Why should you con if you do not trust Election Commission


Vasan
நவ 03, 2025 16:11

கடல், மலை, மரம், நீர், மண் ஆகியவற்றிற்கும் அனைத்து கட்சி கூட்டம் கூடினால் பலன் எளிதில் கிடைக்கும்.


duruvasar
நவ 03, 2025 10:34

நாங்களே எதை தின்னால் பித்தம் தெரியும்னு திண்டாடிக்கிட்டிருக்கோம். நீங்க வேற. அது போக 10 பேராவது சேர்த்தால்தான்வ் ஒப்பாரி சோபிக்கும். ஆத்மாவும் சாந்தி செய்யும் யுக்தி.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 03, 2025 09:57

சீமானின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அவரது கருத்துக்களை புறந்தள்ளுபவர்கள் விரைவில் அதற்கான பலனை அனுபவித்து புரிந்து கொள்வார்கள். தமிழகம் உருப்பட வேண்டுமென்றால் மக்களை, இயற்கையை, அனைத்து உயிர்களையும் நேசிக்கிற ஒருவன் 2026 ல் ஆட்சிக்கு வர வேண்டும். இல்லையென்றால் திருட்டு கழகங்களின் ஆட்சியில் தமிழகம் சூறையாடப்பட்டிருக்கும்.


Mani . V
நவ 03, 2025 05:27

"....... .தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதால் ஒரு பயனுமில்லை. அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தால், எந்த பலனும் கிடையாது........". கருப்பன் குசும்பன், அடுத்த பெட்டிக்கு அச்சாரம் போடுகிறான்.


முக்கிய வீடியோ