உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை

மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்கிறார் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது. ஆதாரமற்றது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை எனவும் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.

பரிசீலனை

2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 211 மசோதாக்கள் கிடைத்துள்ளன. இதில் 81 சதவீத மசோதாக்களுக்கு கவர்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அவற்றில் 95 சதவீத மசோதாக்கள் மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவை. மேலும் 13 சதவீத மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன; இதில் பெரும்பாலானவை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பப்பட்டவை. மீதமுள்ள எட்டு மசோதாக்கள் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் வந்தவை. அவை இன்னும் பரிசீலனையில் உள்ளன.ஆனால் இந்த விவரங்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும்.

விதிகளுக்கு முரணானவை

சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சட்டசபையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 10 மசோதாக்கள் கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவை யுஜிசி விதிகளுக்கு முரணானவை. சட்டசபையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்பதால், அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் அனுப்பி வைத்தார்.

கடமை

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் கவர்னர் ஒவ்வொரு மசோதாவையும் ஆய்வு செய்துள்ளார். அரசியலமைப்பின் விதிகளின்படி கவர்னர் செயல்பட்டு வருகிறார். மாநில மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஜனநாயக செயல்முறைகளுக்கு உட்பட்டு, தனது அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார். அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பிற்கு உட்படுவதை உறுதி செய்வதற்கு கவர்னர் கடமைப்பட்டுள்ளார். தமிழ் பாரம்பரியம், கலை, இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முயற்சிகளை கவர்னர் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் . தமிழக மக்களின் நலனுக்காக, அரசியலமைப்பின் வரம்புக்குள் பொறுப்புடன் செயல்படுவேன் என கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மணிமுருகன்
நவ 08, 2025 00:04

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி இதுவரை பார்த்த கவர்னர்களில் கவர்னர் ரவி வேறுபட்தவர் என்பதே உண்மை இதுவரை ரப்பர்ஸடாம்பு கவர்னர்களை தான் பார்த்திருக்கிறார்கள் இவர் பல கேள்விகளைக் கேட்கிறார் அரசியல் தெரிந்தவர் விஷயம் தெரொந்தவர் என்றால்அவரை அழிக்கத் தான் முன்நிற்கும் கூட்டம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 22:08

உச்சநீதிமன்றம் உச்சி மண்டையில் போட்ட குட்டினால் இவருக்கு எல்லாம் மறந்து போச்சா?


panneer selvam
நவ 07, 2025 20:48

Read Governor response before you comment


என்றும் இந்தியன்
நவ 07, 2025 17:31

திமுக ஆட்சியில் நடப்பது ஒருக்காலும் தவறேயில்லை???ஏன்???


Sundar R
நவ 07, 2025 16:52

திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகளையும், தெலுங்கு கட்சிகளான திமுக, தவெக, விசிக, மதிமுக, தேமுதிமுக ஆகிய கட்சிகளையும் 2026 அசெம்பிளி தேர்தலில் தமிழக மக்கள் அடியோடு நிராகரித்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை மட்டும் சட்டசபைக்குள் அனுப்பி வைத்தால், தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படும். நல்ல அறிவாற்றல் மற்றும் அனுபவம் கொண்ட தலைவர் முதலமைச்சராக இருக்க வேண்டும். அப்போது தான், தமிழகம் ஜொலிக்கும். தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆளும் கூட்டணியில் இருக்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தலைவர்களைக் கொண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தவாக மற்றும் கொமதேக இதுபோன்ற கட்சிகள் மறுபடியும் திமுகவோடு கூட்டணியை தொடர்ந்தால், தற்போது இருப்பதைப் போல புகழ்மிக்க வாழ்வு வாழ்வார்கள். தமிழகமெங்கும் திராவிட துர்நாற்றம் வீசும். மேற்கூறிய நிலையை தவிர்க்க, ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டு மாபெரும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


Venugopal S
நவ 07, 2025 16:19

அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுப்பதில் காட்டும் வேகத்தை தமிழக அரசின் மசோதாக்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில் காண்பித்தால் பிரச்சினையே வராதே!


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 18:59

மசோதாக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றோ, அப்படியே ஏற்று ஒப்புதலளிக்கவேண்டும் என்றோ கவர்னருக்கு கட்டாயம் இல்லை ....


vivek
நவ 07, 2025 21:58

வீணா போன மசோதாவுக்கு எதுக்கு அனுமதி தரணும் வேணு??


CUSTOMER SERVICE. IPLABS
நவ 07, 2025 15:42

மிக்க மகிழ்ச்சி. தங்கள் நேர்மையும் , கடமை உணர்வும் , அரசியல் அமைப்பில் தங்கள் உன்னத சேவையும் , தமிழக மக்களால் எக்காலத்திலும் நினைவு கூறப்படும்.


SULLAN
நவ 07, 2025 18:24

பழமையான சேவை


முக்கிய வீடியோ