ஊரக வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில், ஊரக வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்கு, 2,430.8 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அரசாணை: ஆறாவது மாநில நிதிக்குழு பரிந்துரையின்படி, 2026 – 27ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட, வரவு – செலவு திட்ட மதிப்பீட்டில், 1,025.80 கோடி ரூபாயை விடுவிக்க கோரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கமிஷனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலித்த அரசு, நிதித்துறை ஒப்புதலுடன், மாநில அளவிலான மானி யமாக, 955.80 கோடி ரூபாய், மாவட்ட அள விலான மானியமாக 70 கோடி ரூபாய் என, 1,025.80 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உள்ளது. அதேபோல், மூலதன மானிய நிதி வாயிலாக, ஊரக வளர்ச்சி மற்றும் சாலை பணிகளுக்காக, 1,405 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. மொத்தம் 2,430.8 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.